BUSINESS

உங்களுக்கு அவசரமாக பர்சனல் லோன் வேண்டுமா..? இந்த விஷயங்களை பண்ணுங்க!

யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பண தேவை ஏற்படலாம். அது முக்கியமான குடும்ப நிகழ்வு, வெக்கேஷன், எதிர்காலத்திற்கான திட்டம் அல்லது ஆடம்பரமான ஒரு பொருளை வாங்குவதற்கு என்று எந்த காரணத்திற்காகவும் ஒருவருக்கு பணத்தட்டுப்பாடு வரலாம். எந்த காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், இதுபோன்ற சூழ்நிலையில் பெரும்பாலானவர்கள் முதலில் யோசிப்பது தனிநபர் கடனை பற்றி தான். பர்சனல் லோன் அல்லது தனிநபர் கடன் என்பது எந்த ஒரு அடமானமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நபரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. இதனை வங்கி அல்லது வங்கி அல்லாத நிறுவனங்கள் (NBFC) அல்லது ஃபின்டெக் அப்ளிகேஷன் மூலமாக கூட பெற்றுக் கொள்ளலாம். பர்சனல் லோன்களை உடனடியாக பெறுவதை ஊக்குவிப்பதற்கு இந்த நிறுவனங்கள் ஆன்லைனில் பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆப்ஷனை வழங்குகின்றன. ஒருவேளை நீங்கள் பர்சனல் லோன் வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் அது சம்பந்தமான அனைத்து முக்கியமான விஷயங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம். பர்சனல் லோன் வாங்குவதற்கு தேவையான டாக்குமென்ட்கள்: கடந்த 3 மாதங்களுக்கான சேலரி ஸ்லிப் வருடாந்திர வருமானம் மற்றும் TDS டிடக்ஷன்களை காட்டும் படிவம் 16 கடந்த 6 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் பான் கார்டு ஆதார் ஆதன்டிகேஷன் மூலமாக KYC இப்போது ஒரு உதாரணத்துடன் பர்சனல் லோனை புரிந்து கொள்ளலாம்: ஒருவேளை உங்களுக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் பின்வரும் லிங்க்கு செல்ல வேண்டும். அதில் உங்களுக்கு என்னென்ன மாதிரியான பர்சனல் லோன் ஆஃபர்கள் கிடைக்கும் என்பதை பார்ப்பதற்கு உங்களுடைய போன் நம்பரை என்டர் செய்ய வேண்டும். இந்த ஆஃபர்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய மாத EMI என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு பர்சனல் லோன் EMI கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு உங்களுக்கு தகுந்த ஒரு ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, உங்களுக்கு 2.5 லட்சம் லோன் வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு வங்கி 10.5 சதவீதத்தில் லோன் வழங்குவதற்கு தயாராக உள்ளது என்றால் அந்த கடனை நீங்கள் திருப்பி செலுத்துவதற்கு பல்வேறு ஆப்ஷன்களை தெரிந்து கொள்வதற்கு பர்சனல் லோன் EMI கால்குலேட்டரை பயன்படுத்துங்கள். இதையும் படியுங்கள் : சம்பளத்தை வைத்து அதிகபட்சமாக எவ்வளவு பர்சனல் லோன் வாங்க முடியும்..? விவரம் இதோ! 2.5 லட்சம் ரூபாய் கடனை 10.5 சதவீத வட்டிக்கு 36 மாதங்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டுமானால் ஒவ்வொரு மாதமும் 8,125 செலுத்த வேண்டும். இதுவே 48 மாதங்களுக்கான EMI 6400 ஆக குறைகிறது. ஆனால் 60 மாதங்கள் நீங்கள் EMI செலுத்துவதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு 5,373 ரூபாய் செலுத்தினால் போதும். பர்சனல் லோன் சம்பந்தப்பட்ட வட்டி விகிதம், லோன் கால அளவு மற்றும் மாத EMI போன்ற விஷயங்களை நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிறுவனம் அல்லது ஃபின்டெக் அப்ளிகேஷனில் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். உங்களுடைய தகுதியின் அடிப்படையில் உங்களுக்கான கடன் அங்கீகாரம் பெற்றவுடன் உங்களுடைய லோன் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்படும். எனினும் நீங்கள் லோன் வாங்கும் நிறுவனத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை படிக்க மறக்காதீர்கள். மேலும் மறைமுகமான கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.