BUSINESS

ஏர்டெல் யூசர்களே.. ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் உடன் தினசரி 2GB டேட்டா.. இந்த ப்ரீபெய்ட் பிளான் பற்றி தெரியுமா?

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக் ஒரு புதிய ப்ரீபெய்ட் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளான் ஹை ஸ்பீட் டேட்டா கனெக்டிவிட்டி மற்றும் OTT-ஐ பயன்படுத்துவதையும் இணைத்து ரூ.400-க்கு கீழ் வழங்குகிறது. ஏர்டெல் இந்த பிளானை ரூ.398 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல்லின் ரூ.398 பிளானானது ஒரு நாளைக்கு 2GB 5ஜி டேட்டா, அன்லிமிட்டட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்ஸ்களை வழங்குகிறது. இது தினசரி இலவசமாக 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. இந்த புதிய பிளான் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்டது. மேலும் இந்த ஏர்டெல் பிளான் 28-நாள் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனுடன் வருகிறது. இது யூஸர்கள் லைவ் ஸ்போர்ட்ஸ், திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க உதவும். இருப்பினும் இந்த இலவச சப்ஸ்கிரிப்ஷன் ஹாட்ஸ்டாரின் பேஸிக் பிளானிற்கு ஒத்ததாக உள்ளது. இது ஒரே ஒரு ஸ்மார்ட் போனுக்கான அணுகலை மட்டுமே வழங்குகிறது மற்றும் விளம்பரங்களை உள்ளடக்கியது. ஹாட்ஸ்டாரின் அடிப்படைத் திட்டத்தின் விலை 3 மாதங்களுக்கு ரூ.149 என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொபைல் யூஸர்களுக்கு பிரத்யேக பலன்களை வழங்கும் வகையில் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜியோ அறிவித்துள்ள இந்த ஸ்பெஷல் ப்ரீபெய்ட் பிளான் தற்போது இந்தியாவில் ரூ.2,025 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும். இந்த ஸ்பெஷல் பிளானை நாட்டில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களும் ஜனவரி 11, 2025 வரை பெறலாம். ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா வீதம் இந்த பிளான் மூலம் மொத்தம் 500GB 4ஜி டேட்டா வழங்கப்டுகிறது. மேலும் யூஸர்கள் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச SMS-கள் அனுப்ப முடியும். தவிர JioTV, JioCinema மற்றும் JioCloud உள்ளிட்டவற்றுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனும் இவற்றுள் அடக்கம். ஏர்டெல் அதன் ரூ.398 ப்ரீபெய்ட் பிளான் மூலம் தினசரி டேட்டா மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கைத் தேடும் யூஸர்களுக்கு ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதே நேரம் ஜியோவின் புத்தாண்டு வரவேற்புத் திட்டம் நீண்ட வேலிடிட்டி மற்றும் விரிவான பலன்களை யூஸர்களுக்கு அளிக்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.