BUSINESS

“அடுத்த மாதம் அறுவடைக்கு ரெடியா இருந்தது” - வீணாகும் பொங்கல் கரும்புகள்... அதிருப்தியில் விவசாயிகள்!

மழையில் சேதம் அடைந்து வரும் பொங்கல் கரும்புகள் தஞ்சையில் கனமழை பெய்து வருவதால் பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்புகள் சேதமடைந்து வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்’’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஒரு சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் டிசம்பர் 18 ம் தேதி வரை சில பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இந்த நிலையில் தஞ்சையில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு சாரல் மழையாகவும் கன மழையாகவும் பெய்து வருவதால் பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்புகள் சேதம் அடைய தொடங்கியுள்ளன. அதாவது ஒரத்தநாட்டை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்புகள் சேதமடைந்துள்ளன. கரும்புகள் மொத்தமாக சாயவில்லை என்றாலும் வயலில் தேங்கி இருக்கும் தண்ணீரால் கரும்பின் நிறம் மாறி பூச்சி தாக்குதல் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையும் வாசிக்க: TN heavy Rain Alert: அடுத்த டார்கெட் இந்த தீவு மாவட்டம் தான்..? அந்தமானில் உருவாகும் புதிய காற்று சுழற்சி… ஒரத்தநாட்டை அடுத்த அய்யப்பட்டி கிராமத்தில் 10 விவசாயிகள் சுமார் 20 ஏக்கரில் பொங்கல் கரும்பை அடுத்த மாதம் அறுவடை செய்ய உள்ள நிலையில், இந்த மழையில் ஏற்பட்ட பாதிப்பால் சில கரும்புகள் சாய்ந்ததால் அதனை கயிறுகளால் இழுத்து கட்டி வரும் வேலைகளை பார்த்து வருகின்றனர். இது வரை பெய்த மழையிலேயே, மழை நீர் மட்டுமல்லாது அருகில் இருக்கும் குளத்து நீரும் நிரம்பி கரும்பு தோட்டத்திற்குள் புகுவதால், தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மழை தொடர்ந்தால் இதைவிட பெரும் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.