BUSINESS

130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனத்தை வழிநடத்தும் பெண் சிங்கம் - யார் இந்த மானசி கிர்லோஸ்கர்?

ரூ.13,488 கோடி ரூபாய் மதிப்புள்ள, 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிர்லோஸ்கர் குழுமத்தை வழிநடத்தும் மானசிக்கும், டாடா குடும்பத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு என்ன என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். மானசி கிர்லோஸ்கர் டாடா, இப்போது கிர்லோஸ்கர் குழுமத்தின் வளர்ந்து வரும் முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். ரூ.13,488 கோடி ரூபாய் மதிப்புள்ள கிர்லோஸ்கர் குழுமத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் மானசி, 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனத்தை வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ளார். கிர்லோஸ்கர் குழுமத்தில் இவரது முக்கிய பங்கு மற்றும் டாடா குடும்பத்திற்கும், இவருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்த விரிவான தகவலை இங்கே பார்ப்போம். மானசியின் தந்தை விக்ரம் கிர்லோஸ்கர் நவம்பர் 2022 இல் காலமான பிறகு, கிர்லோஸ்கர் குழுமத்தில் மானசி முக்கிய பங்கு வகித்து வருகிறார். மானசி கிர்லோஸ்கர் டாடா ஆகஸ்ட் 7, 1990 இல் பிறந்தார். தற்போது கிர்லோஸ்கர் ஜாயிண்ட் வென்ச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனத்துடன் முன்பு இருந்த கூட்டமைப்பின் அடிப்படையில், டொயோட்டா இன்ஜின் இந்தியா லிமிடெட் மற்றும் கிர்லோஸ்கர் டொயோட்டா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களை நேர்த்தியாக கையாண்ட மானசி, நிர்வாகத் துறையில் மிகவும் சுமூகமாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார். மானசியின் தலைமைப் பொறுப்பிற்கு முன்பாகவே, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுவில் அவர் முக்கிய பதவி வகித்தார். பின்னர் அவர் அங்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் டொயோட்டாவின் இரண்டாவது ஹைப்ரிட் வாகனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மானசியின் பங்கு முக்கியத்துவம் பெற்றது, இது புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கான அவரது பங்களிப்பை கோடிட்டுக் காட்டுகிறது. ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் இளங்கலை நுண்கலை பட்டம் பெற்ற மானசி, தனது நிர்வாகத்திலும் தன்னை ஒரு கலைஞராக நிலைநிறுத்திக் கொண்டுடிருக்கிறார். மேலும், அவரது உலகளாவிய தொலைநோக்கு எண்ணங்கள், அவரை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறது. அவரது கலை உணர்வுகள், பாரம்பரிய நடைமுறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்ததன் மூலம், கிர்லோஸ்கர் குழுமம் தொழில்துறையில் ஒரு புதுமையான நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவியாக இருக்கிறது. மேலும் அவர் இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் எஸ்டிஜிகளுக்கான முதல் இளம் வணிக சாம்பியனாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரையில், மானசி மற்றொரு புகழ்பெற்ற வணிகக் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புடையவர். நோயல் டாடாவின் மகனும், ரத்தன் டாடாவின் மருமகனுமான நேவில் டாடாவை கடந்த 2019 இல் மானசி திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், தொழில்முறை நடவடிக்கைகளில் அவர் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. சமகால பார்வையுடன், ஒரு வளமான பாரம்பரியத்தை சமநிலைப்படுத்தி, மானசி கிர்லோஸ்கர் டாடா தனது குடும்பத்தின் பாரம்பரியத்தை முன்னேற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார். மானசியின் பயணம் அவரது புதுமையான தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் வணிக உலகில் மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன் ஆகியவையே இதற்கு சான்றாக நிற்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.