உங்களுக்கு சேதமடைந்த பொருள் விற்கப்பட்டதா? உங்கள் ஆன்லைன் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதா? கடையில் பேப்பர் பேக்-களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா? ஒரு நுகர்வோர் என்ற முறையில், உற்பத்தியின் அளவு, தரம், தூய்மை, விலை, ஆற்றல், தரநிலை மற்றும் சந்தை முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பு பற்றிய நியாயமான தகவலைப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது. இருப்பினும், பெரும்பாலான நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இப்போதெல்லாம், எந்தவொரு நுகர்வோரும் ஆன்லைனில் எளிதாக புகார் செய்யலாம். eDaakhil ஆன்லைன் போர்டல் ஆனது 2020 இல் நேஷனல் கன்சூமர் டிஸ்பியூட் ரீடிரஸ்சல் கமிஷன் ஆல் தொடங்கப்பட்டது. பல நுகர்வோர் மன்றங்களில் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்ய வாடிக்கையாளர்களை அனுமதிப்பதன் மூலம் செயல்முறையை எளிதாக்குகிறது. 5 லட்சம் வரை கோரிக்கை இருந்தால், வழக்கின் விசாரணை இலவசம். eDaakhil போர்டல் என்றால் என்ன? eDaakhil போர்டல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நுகர்வோர் புகார்களை பதிவு செய்வதற்கான விரைவான மற்றும் எளிதான வழிமுறையாகும். நுகர்வோருக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட e-daakhil என்ற இணையதளத்தில் எந்த ஒரு இ-காமர்ஸ் தளம், நிறுவனம், ஸ்டோர், டீலர் அல்லது கடைக்காரர் மீது புகார் செய்யலாம். எந்தவொரு CSC (பொது சேவை மையம்) மூலமாகவும் நுகர்வோர், எந்தவொரு புகாரையும் இல் பதிவு செய்யலாம். இதற்காக நீங்கள் முதலில் போர்ட்டலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். போர்ட்டலில் பதிவு செய்த பிறகு, ஏதேனும் புகார் இருந்தால், உங்கள் எல்லா பிரச்சனைகளையும் இங்கே தெரிவிக்கலாம், அதன் பிறகு நுகர்வோர் அமைச்சகம் உங்கள் புகாரை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும். eDaakhil : புகாரை பதிவு செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். என்ற e-Daakhil போர்ட்டலுக்குச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ்-இல் உள்ள ‘கம்பிளைன்ட்’ பட்டன்-ஐ கிளிக் செய்யவும். பெயர், தொலைபேசி எண், ஈமெயில் ஐடி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை என்டர் செய்து போர்ட்டலில் ரெஜிஸ்டர் செய்யவும். உங்கள் புகாரானது தொகையின் அடிப்படையில் கீழ்தோன்றும் ஆப்ஷனிலிருந்து புகார் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். உங்கள் புகாரை முழுமையான விளக்கத்துடன் ஃபார்ம் -ஐ நிரப்பவும். உங்கள் புகாரை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். புகாருடன் ஏதேனும் சப்போர்ட்டிங் டாக்குமெண்ட்களை இணைக்கவும். ஸ்கிரீனில் தெரியும் கேப்ட்சா கோட்-ஐ என்டர் செய்யவும். உங்கள் புகாரைச் சமர்ப்பிக்க, ‘சப்மிட்’ பட்டனைக் கிளிக் செய்யவும். புகாரைச் சப்மிட் செய்த பிறகு, உங்கள் புகாரின் ஸ்டேட்டஸ்-ஐ ட்ராக் செய்ய கம்ப்ளைண்ட் ஐடி உங்களுக்கு வழங்கப்படும். UPI அல்லது நெட் பேங்கிங்கைப் பயன்படுத்தி உங்கள் நீதிமன்றக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். உங்கள் புகார் ஆனது 48 மணி நேரத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் ஒரு மாதத்திற்க்குள் இதற்கான தீர்வு எடுக்கப்படும். இதில் பிராண்டுகள் மற்றும் நுகர்வோருக்கு வழங்கப்படும் செய்திகளையும் நீங்கள் மானிட்டர் செய்து பார்க்கலாம். புகாரைத் தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உங்களுக்கான ஃபார்ம் -ஐ நிரப்ப ஒரு வழக்கறிஞரை நீங்கள் நியமிக்கலாம். அதே லாகின் சான்றுகளைப் பயன்படுத்தி உங்கள் புகாரை மீண்டும் சமர்ப்பிக்கலாம். None
Popular Tags:
Share This Post:
2025-ல் அதிகரிக்க உள்ள மேகி நூடுல்ஸின் விலை.. எவ்வளவு, ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 22, 2024
வீதியெங்கும் வர்ண ஜாலம் செய்யும் கோலங்கள்... வண்ண வண்ண கோலப்பொடி தயாராவது இப்படி தான்...
December 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் எதுவரை இருந்தால் டிக்கெட் உறுதியாகும்? - சிறிய கணக்கு இதோ..!
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.