BUSINESS

காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்... ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்...

காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்... ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பொரோரை கிராமத்தில் பிரபு நஞ்சன் என்பவர் அவருடைய நிலத்தில் ஆப்பிள் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகிறார். நீலகிரியில் பச்சை ஆப்பிள் முன்பில் இருந்தே விளைந்து வருகிறது. ஆனால் இமாச்சலில் விளையும் ஆப்பிள் ரகம் இங்கு பயிரிடப்படுவதில்லை. இந்நிலையில் விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வருகை புரிந்து இருந்த நபர் ஒருவர் நீலகிரியிலும் ஆப்பிள் சிறப்பாக விளையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்தில் விளையக்கூடிய ஆப்பிள் நீலகிரியில் விளைவிப்பதைக் குறித்து முயற்சியில் இறங்கிய பிரபு நஞ்சன், அவருடைய 40 சென்ட் நிலத்தில் 250க்கும் மேற்பட்ட ஆப்பிள் நாற்றுகளை நடவு செய்துள்ளார். இதையும் படிங்க: ஜாதி, மதம் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… ஆதரவற்றோருடன் கொண்டாடிய நீலகிரி எஸ்பி… இவர் ஐந்து வகையான ஆப்பிள் மரங்களை நடவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் ஒவ்வொன்றிற்கும் சுவையிலும், நிறத்திலும், தரத்திலும் வேறுபடுவதாகக் குறிப்பிடுகிறார். இவர் இந்த ஆப்பிள் மரங்களை நடவு செய்து இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், ஒரு சில மரங்களில் பழங்கள் காய்த்துப் பழுத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்பிள் நாற்றுகளை இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வரவழைத்து நடவு செய்வது வரையிலும் ஒரு நாற்றுக்கு 500 ரூபாய் வரை செலவானது. ஒரு மரத்தில் 100 கிலோ வரை ஆப்பிள் பழங்கள் காய்ப்பதால் ஆப்பிள் விவசாயத்தில் விவசாயிகள் சிறந்த லாபம் அடைய முடியும். இவரைப் போலவே ஒரு சில விவசாயிகளும் சில ஆப்பிள் செடிகளை நடவு செய்துள்ளனர். ஆனால் பிரபு நஞ்சன் 250க்கும் மேற்பட்ட கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறார். இதில் காளா, ஆடம்ஸ், ஸ்காலட், ஜெரோமின் போன்ற ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இங்கு பறவைகளாலும், வனவிலங்குகளும் பழங்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார். இதையும் படிங்க: “உண்மையான மனிதனாக உள்ளே வாங்க“ சாதி, மத அடையாளத்திற்குத் தடா போடும் கிராம மக்கள்… மேலும், வியாபாரத்திற்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும். சிறந்து விளைச்சல் ஏற்பட்டால் விவசாயிகளும் அதிகம் ஆப்பிள் பயிர் செய்வர். அதன் பிறகு உள் மாவட்டத்திலேயே சிறந்த விலை கிடைக்கவும் வழிவகை செய்ய முடியும் என்றார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.