BUSINESS

டெலிவரி தொடங்கும் முன்னே.. 10 நாளில் 10,000 முன்பதிவுகளை குவித்த ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார்!

மாருதி சுசூகி பிரீஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 போன்ற கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகப்படுத்தப்பட்ட ஸ்கோடா கைலாக் எஸ்யூவி வகை கார்கள் 10 நாட்களில் 10,000-க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. ஸ்கோடா தனது முதல் சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவியான கைலாக்கை நவம்பர் 6 அன்று அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், ஸ்கோடா எஸ்யூவி பிரிவில் மிகவும் கச்சிதமாக நுழைந்தது. மாருதி சுசூகி பிரீஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 போன்ற கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும், இந்த புதிய ஸ்கோடா கைலாக் 10 நாட்களில் 10,000-க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. ஸ்கோடா நிறுவனம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கைலாக்குக்கான முன்பதிவுகளை ஆரம்பித்தது. முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரிகள் ஜனவரி 27, 2025 முதல் தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்த முதல் 33,333 வாடிக்கையாளர்கள் 3 வருட நிலையான பராமரிப்பு வசதியை இலவசமாகப் பெறுவார்கள் என்றும் ஸ்கோடா தெரிவித்துள்ளது. முதல் 33,333 வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு கி.மீ-க்கு ரூ. 0.24 என இந்த சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவிக்குள், ஸ்கோடா கைலாக் குறைந்த பராமரிப்புச் செலவைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுடனான தொடர்பை மேம்படுத்தும் விதமாக, ஸ்கோடா கைலாக் உடன் இந்தியா முழுவதும் ‘ட்ரீம் டூரை’ மேற்கொள்ளப்போவதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி, டிசம்பர் 13 ஆம் தேதி சக்கன் ஆலையில் தொடங்கி, மூன்று கைலாக் எஸ்யூவிகள் 43 நாட்களில் 70 நகரங்களை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு வழிகளில் பயணிக்கும். ஜனவரி 25ம் தேதிக்குள் இந்த எஸ்யூவிக்கள் ஆலைக்கு மீண்டும் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு-தெற்கு பாதையில் புனே, கோலாப்பூர், பனாஜி, மங்களூரு, மைசூரு, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களும், மேற்கு-வடக்கு பாதையில் மும்பை, சூரத், வதோதரா, அகமதாபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களும், மூன்றாவது பாதை புனேவிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும், நாசிக், நாக்பூர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களையும் உள்ளடக்கியது. 115bhp மற்றும் 178Nm டார்க் செயல்தின் கொண்ட, 1.0 லிட்டர் TSI பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. கைலாக், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி கைலாக் அதிகபட்சமாக மணிக்கு 188 கிமீ வேகத்தை எட்டும் என்றும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் 10.5 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்றும் ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கோடா கைலாக் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரெஸ்டீஜ் ஆகி நான்கு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. அவற்றின் (எக்ஸ்-ஷோரூம்) விலைகள் கிளாசிக் 1.0 TSI MT - ரூ. 7,89,000 கிளாசிக் 1.0 TSI AT - AT இல்லை சிக்னேச்சர் 1.0 TSI MT - ரூ. 9,59,000 சிக்னேச்சர் 1.0 TSI AT - ரூ. 10,59,000 சிக்னேச்சர்+ 1.0 TSI MT - ரூ. 11,40,000 சிக்னேச்சர்+ 1.0 TSI AT - ரூ. 12,40,000 பிரெஸ்டீஜ் 1.0 TSI MT - ரூ. 13,35,000 பிரெஸ்டீஜ் 1.0 TSI AT - ரூ. 14,40,000 கைலாக்கின் என்ட்ரி-லெவல் கிளாசிக் வேரியண்ட்டின் விற்பனை முடிந்து விட்டதாகவும், அந்த வேரியண்ட்டை இனி முன்பதிவு செய்ய முடியாது என்றும் ஸ்கோடா அறிவித்துள்ளது. இருப்பினும், 33,333 முன்பதிவுகள் முடிந்தவுடன், வருங்கால வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்து, இந்த வேரியண்ட்டை பதிவு செய்யலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.