சம்பா, தாளடி நெற்பயிர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மஞ்சளாவதை கட்டுப்படுத்துவது எப்படி வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறும்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையின் தாக்கத்தினை தொடர்ந்து, செழித்து வளர்ந்து வந்த சம்பா, தாளடி நெற்பயிர்களில் ஓரிரு இடங்களில் பனிப்பொழிவின் காரணமாக நெற்பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. அதிக குளிர் மற்றும் பனியால் பயிர் நிலத்திலிருந்து தழை உரச்சத்தினை தேவையான அளவு எடுத்துக் கொள்ள முடியாததாலும், பூஞ்சான நோய்களால் இலை புள்ளி, இலையுறை அழுகல் மற்றும் பாக்டீரிய இலை கருகல் நோய் என பல நோய்களால் பயிர் ஒரே நேரத்தில் தாக்கப்படுவதால் மஞ்சள் நிறத்தில் தோகைகள் மாற்றம் பெற்றுள்ளன. இதற்கு உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கை செய்திட வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாசை 1/2 கிலோ சாணி பாலில் கலந்து அத்துடன் 2 லிட்டர் புளித்த தயிர் கலந்து தெளித்து பயன்படுத்தலாம். நோயின் தாக்குதல் அதிகமாக உள்ள இடங்களில் ஒரு ஏக்கருக்கு ஹெக்ஸா கோண சோல் 200 மில்லிஅத்துடன்பிளான்டோ மைசின் 50 கிராம் மருந்து கலந்து 200 லிட்டர் நீரில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நோயுடன் குருத்துப்பூச்சி அல்லது ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதல் உள்ள இடங்களில் மஞ்சள் நோய்க்கு உரிய மருந்துடன் ஏக்கருக்கு 250 மில்லி பெப்ரோனில் மருந்து கலந்து தெளிக்க வேண்டும். பயிர் வளராமல் மஞ்சளாக இருப்பதால் தழைச்சத்து அதிகமிட்டால் வளரும் என்று கருதி யூரியா உரத்தை நோய் உள்ள பயிரில் இட வேண்டும். தெளித்தபின் உடனடியாக 2 கிலோ யூரியா, ஜிங்சல்பேட் மற்றும் ஒரு கிலோ பொட்டாஷ்உரத்தினை 200 லிட்டர் நீரில் கலந்து இலை வழியாகதெளிக்க வேண்டும். பின்பு ஓரிரு தினங்கள் கழித்து ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து தொழு உரத்தை இட்டால் நெற்பயிர்கள் மஞ்சள் நோயிலிருந்து பாதுகாக்கப்டும் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
சபரிமலை சீசனில் அதிகரித்த சிப்ஸ் உற்பத்தி... மேட்டுப்பாளையத்தில் நேந்திரன் விற்பனை அமோகம்...
December 20, 2024மளிகை உள்ளிட்ட உங்களின் தினசரி தேவைகளுக்கு ஏற்ற சிறந்த 7 கிரெடிட் கார்டுகள்...!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 18, 2024
-
- December 18, 2024
-
- December 16, 2024
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்... ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்...
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.