BUSINESS

Amazon: அமேசானில் ஐபோன் 14-க்கு அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?

ஐபோன் 16 அறிமுகத்திற்குப் பிறகு ஐபோன் 14 மற்றும் 15 மாடல்களுக்கான விலைகள் அமேசானில் கணிசமாகக் குறைந்துள்ளன. பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் 512GB வேரியன்ட்டை அதன் அசல் விலையான ரூ.99,900-ஐ விட தற்போது மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது. பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உட்பட ரூ.71,000-க்கும் அதிகமான தள்ளுபடியுடன் இந்த மாடலை இப்போது நீங்கள் அமேசானில் பெறலாம். இதன் மூலம் பிரீமியம் டிவைஸான ஐபோன் 14 மாடலை மிக குறைந்த விலையில் வெறும் ரூ.28,900-க்கு நீங்கள் தற்போது வாங்கலாம். ஐபோன் 14 - 512GB வேரியன்ட் மீதான தள்ளுபடி விவரங்கள்: அமேசானில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடலின் 512GB வேரியன்ட் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அமேசான் தற்போது இந்த போனை ரூ.99,900 விலையில் பட்டியலிட்டிருந்தாலும், இந்த மொபைலின் விலையை 23 சதவீத தள்ளுபடியுடன் வெறும் ரூ.76,900-க்கு வாங்கலாம். இந்த தள்ளுபடியை தவிர கூடுதலாக, ஒரு சிறப்பு வங்கி சலுகையும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடியையும் அமேசான் வழங்குகிறது. இவை தவிர ரூ.46,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் நன்மைகளையும் அமேசான் வழங்குகிறது. பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் இந்த மாடலின் விலை ரூ.71,000 தள்ளுபடியுடன் இறுதியில் வெறும் ரூ.28,900-ஆக குறைகிறது. ஒருவேளை நீங்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை தேர்வு செய்தால் உங்கள் பழைய மொபைலின் நிலையைப் பொறுத்தே சலுகை கிடைக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ஐபோன் 14 - 512GB வேரியன்ட் மீதான EMI சலுகை: உங்களிடம் இந்த மொபைலை வாங்க குறிப்பிட்ட தொகை இல்லை என்றால் அமேசானில் வாடிக்கையாளர்களுக்கு EMI ஆப்ஷன்களும் உள்ளன. மாதாந்திர EMI கட்டணமாக ரூ.3,464-ஐ செலுத்தி இந்த மொபைலை அமேசான் மூலம் சொந்தமாக்கி கொள்ளலாம். ஐபோன் 14 சிறப்பம்சங்கள்: கடந்த 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 அலுமினியம் ஃபிரேமுடன் கூடிய நேர்த்தியான கண்ணாடி ரியர் பேனலை கொண்டுள்ளது. இது HDR10, Dolby Vision மற்றும் 1200 nits பீக் பிரைட்னஸுடன் கூடிய 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. iOS 16 உடன் வரும் இந்த டிவைஸை நீங்கள் எளிதாக iOS 18.2 -க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். ஐபோன் 14-ஆனது 6GB வரையிலான ரேம் மற்றும் 512GB வரை ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த மொபைல் பின்புறத்தில் டூயல் கேமரா சிஸ்டமுடன் வருகிறது, இதில் 12 + 12 மெகாபிக்சல் சென்சார் உள்ளது, முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 12MP கேமரா உள்ளது. இதில் 3279mAh பேட்டரி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்ஃபோன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.