BUSINESS

வெற்றிலை, சங்கு பூவில் கூட சர்பத்... 10 வகையான சர்பத் தயார் செய்யும் மகளிர் குழுவினர்

பத்து வகையான சர்பத் தயார் செய்யும் சுய உதவி குழு திருநெல்வேலி மாவட்டத்தில் கார்த்திகை மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் ஆரோக்கியமும், அளவும் குறையாமல் 10 வகையான சர்ப்பத்தை தயார் செய்து வருகின்றனர். மிகவும் அரிதான சர்பத்துகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக வெட்டிவேர் சர்பத், ரோஜா பூ சர்பத், வெற்றிலை சர்பத், வல்லாரை சர்பத், செம்பருத்தி சர்பத், சங்க பூ சர்பத் தயார் செய்யப்படுகின்றன. இதுகுறித்து சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தங்கம் என்பவர் கூறுகையில், “இந்த கடை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. மகளிர் சுய உதவிக் குழு வளாகத்தில் சர்பத் தயார் செய்கிறோம். மூலிகை சர்பத்துகளை விற்பனை செய்து வருகிறோம். கற்றாழை, சங்குப்பூ, செம்பருத்தி போன்ற எங்கும் கிடைக்காத பத்து வகையான சர்பத்துகளை விற்பனை செய்து வருகிறோம். இதனை மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர் சேர்ந்து செய்கிறோம் . செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்டவற்றை நேரடியாக வாங்கி அவற்றின் சாறில் இருந்து ஜூஸ் செய்கிறோம். முதலில் செம்பருத்தி, கற்றாழையை அவிக்க வேண்டும். பின்னர் அதிலிருந்து சாறு எடுத்து அதனுடன் சீனி பாகு கலக்க வேண்டும். பத்து வகையான சர்பத்துகளும் ஒரு பாட்டில் விலை 175 ரூபாய் ஆகும் நேரடியாக குடிக்க 20 ரூபாய். இதையும் படிங்க: ஊட்டி அருகே வனப்பகுதியில் ராமர் பாதம்… மஞ்சக்கொம்பை கோவிலில் பக்தர்கள் தரிசனம்… இவை மூலிகை சர்பத் என்பதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. ஒவ்வொரு சர்பத்தும் இதயம், நுரையீரல், கிட்னி என உறுப்புகளுக்கு நன்மை அளிக்கின்றன. சங்குப்பூ சர்பத்தை பெண்கள் குடித்தால் மிகவும் நல்லது. கற்றாழை உடலுக்கு குளிர்ச்சி. 5 லிட்டர் வரை தயார் செய்து பாட்டிலில் அடைத்து வைப்போம். காலியானவுடன் அடுத்து தயார் செய்வோம் . மூலிகை சர்பத் என்பதால் அதிகமானோர் வாங்கி செல்கின்றனர்" எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.