BUSINESS

2027-ல் தங்கம் விலை எவ்வளவு காஸ்ட்லியாக இருக்கும் தெரியுமா.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் தகவல்

தங்கம் விலை இந்தியாவைப் பொறுத்தவரையில் தங்கத்தின் பயன்பாடு என்பது அதிக அளவில் வருகிறது. முக்கியமாகக் காதுகுத்து , கல்யாணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளுக்குத் தங்க நகைகளை உறவினர்களுக்கு அளிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர்.‌ தங்கம் அணிவதற்குப் பயன்படுத்துவதை விட அதனை அடகு வைத்துப் படிப்பு செலவு,மருத்துவச் செலவு உள்ளிட்ட அவசரக் காலங்களில் அடகு வைத்துஅந்த சூழலிலிருந்து மீளப் பல குடும்பங்களுக்குத் தங்கம் பயனுள்ள ஒரு இன்வெஸ்ட்மென்ட் பொருளாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலையில் அவ்வப்போது சிறிய அளவிலான தொகைகள் ஏற்றம் , இறக்கம் இருந்து வரும். ஆனால் சமீபகாலமாகத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் செய்திகளையும் பார்த்து வருகிறோம். அதிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது‌. முன்பெல்லாம் கிராமிற்கு ரூ.10-100 வரை ஏற்றம், இறக்கம் இருக்கும். ஆனால், சமீக நாட்களாக 1000-1500 வரை தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7000 முதல் ரூ.7700 வரை விற்பனையாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்? தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கு வருமா? 2027-ம் ஆண்டில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து தஞ்சாவூர் வணிகர் சங்க பேரவைத் தலைவர் வாசுதேவன் கூறியதைப் பார்க்கலாம். இதையும் வாசிக்க: உஷார் மக்களே… நாய் கடித்தால் கட்டாயம் இத பண்ணுங்க… மருத்துவர் கூறும் அட்வைஸ்… கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ரூ.5800 ரூபாய் இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.7000 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.‌ அதாவது ரூ.46,000 விற்ற ஒரு பவுன் தற்போது ரூ.56000 தை தாண்டி உள்ளது‌. இது வரலாறு காணாத நிகழ்வு என்றே சொல்லலாம். தங்கம் விலை ஏற்றம் காரணமாக அதனை வாங்கும் சக்தி (Purchasing Power) பொது மக்களிடையே குறைந்து வருகிறது. இது பெரிதளவில் சாமானிய மக்களைப் பாதிக்கிறது. கல்யாணம், காது குத்து உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளில் 10 பவுன் நகை வாங்கும் இடத்தில் தற்போது‌ ஆறு பவுன், ஏழு பவுன் வாங்க வேண்டிய சூழலில் மக்கள் இருக்கின்றனர். உலக நாடுகள் தங்கத்தில் அதிகம் முதலீடு வைக்கின்றனர்.‌அதிலும் சீனா போன்ற நாடுகள் நகைகளை வாங்கி குவிக்கின்றனர். விலைப் பொருள் அல்ல: சமீக ஆண்டுகளாக மைக்ரோ பைனான்ஸ் அதிகரித்து வருவதும் தங்கம் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்து வருகிறது . அதேபோன்று, செல்வந்தர்களும் தங்க ஆபரங்களில் அதிகமாக வாங்கி சேர்ப்பதாக தெரிவித்தார். மாதமாதம் ஆயிரக்கணக்கில் விலை உயரும் தங்கம் மீண்டும் சற்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் முக்கியமாக 2027 ஆம் ஆண்டிற்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை பத்தாயிரத்திற்கும் அதிகமாக கூட விற்பனை செய்யப்படும் சூழல் வந்து கொண்டே இருக்கிறது. எனவே ஒரு பவுன் நகை ₹1 லட்சத்தை தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் சாதாரண நடுத்தர மக்கள், ஏன்.. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் கூட நகைகளை வாங்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் கடை வைத்துள்ள எங்களாலே நகைகளை வாங்க முடியவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் கிராம் ரூ.5500 விற்பனையானது. 100 கிராம் நகை வங்க ரூ‌.5.5 லட்சம் தேவைப்பட்டது. ஆனால் இன்னைக்கு ரூ.7.70 லட்சம் தேவப்படுது. 6 மசாத்துல கிட்டத்தட்ட ரூ.2.70 லட்சம் வரை அதிகபடியா ஆகுது. எப்படி நாங்க தங்கம் வாங்க முடியும். அதனால வியாபாரிகளாலேயே இன்றைக்கு தங்கத்தை கொள்முதல் செய்து நகைக்கடையில் கஸ்டமர் கிட்ட விற்பனை செய்வதற்கு பெரும் சவாலாக உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.