BUSINESS

தக்காளி விலையைப் பார்த்தாலே பயமா இருக்கு... மொத்த மார்க்கெட்டிலேயே கிடுகிடு விலையேற்றம்...

தக்காளி விலை அன்றாட வாழ்வில் அனைவரும் விதவிதமாகப் பல ருசியான உணவுகளை உட்கொள்ள ஆரம்பித்து விட்டோம். சமீபத்தில் பல்வேறு புதிய வகையான உணவுகளையும் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றோம். ஆனால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதில் இன்றியமையாத பங்கு வகிப்பது காய்கறிகள், அதிலும் அத்தியாவசியமானதாக உள்ளது தக்காளி. நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் தக்காளி மைசூர் குண்டல்பேட் போன்ற பகுதிகளிலிருந்து அதிகமாகக் கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் தக்காளியின் சாகுபடி குறைவால் தக்காளி விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி விலை ரூ.20க்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் காய்கறி விலையில் நாளுக்கு நாள் மாற்றம் நிகழ்ந்து கொண்டே உள்ளது. அவ்வாறாக ஊட்டி மார்க்கெட் பகுதிகளில் இன்றைய தினம் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் படிங்க: மார்க்கெட்டிலேயே மாஸ் காட்டும் தக்காளி… விலையைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் பொதுமக்கள்… சமவெளிப் பகுதிகளில் தக்காளி விளைந்தாலும் தக்காளியின் விலை அதிகமாகவே உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர் தக்காளி வியாபாரிகள். இன்றைய தினம் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை ரூ.100 வரையிலும் தக்காளி விலை விற்பனையாகக் கூடும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அன்றாட பயன்பாட்டிற்காகக் காய்கறிகளில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை கிடுகிடு உயர்வால் பாமர மக்களே பாதிப்படைந்துள்ளனர். தக்காளி விலை குறித்து ஊட்டி மார்க்கெட் மொத்த வியாபாரி சபரீஸ் கூறுகையில், “நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் தக்காளி வரத்து குறைந்துவிட்டது. எங்களுக்குத் தக்காளி மைசூர் பகுதியிலிருந்து வருகிறது. இன்றைக்கு ஒரு டிரே 1500 வரை விற்பனை ஆகிறது. நாளை 2000 வரையிலும் விற்பனையாகக் கூடும். தக்காளியின் விலை 100 ரூபாய் தாண்ட வாய்ப்புள்ளது. தக்காளி மழையினாலும் மழை இல்லாமலும் பாதிப்பு அடைந்துள்ளதால் விளைச்சல் குறைந்துள்ளது. ஊட்டியில் மட்டுமே 100 ரூபாயை எட்டும், ஆனால் சமவெளிப் பகுதிகளில் 130 முதல் 140 வரையிலும் விற்பனையாகும் வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: திருநெல்வேலியில் திக்கு தெரியாமல் சுற்றிய உயிர்… உறவைக் கண்டதும் கட்டியணைத்து கண்ணீர்… மேலும் கடநாடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கூறுகையில், “காலாண்டு விடுமுறைக்காகக் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் உள்ள நிலையில் தக்காளி விலை அதிகரிப்பு என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பாகவே உள்ளது. காய்கறி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மிகவும் சிரமமாக உள்ளது. அரசு இதில் கவனம் கொண்டு விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.