BUSINESS

ஊட்டி உருளைக் கிழங்கு சுவையின் ரகசியம் தெரியுமா... விதைப்பு முதல் அறுவடை வரையுள்ள டெக்னிக்...

உருளைக்கிழங்கு விளைச்சல் விவசாயத்திற்காக அதிக முக்கியத்துவம் அளிக்கும் நீலகிரி மாவட்டத்தில் பலவகை காய்கறி ரகங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. அதில் உருளைக்கிழங்கு முக்கியமான பயிராக உள்ளது. அந்தக் காலத்தில் இருந்தே நீலகிரியில் உருளைக்கிழங்கு பாரம்பரியமாக விளைச்சல் செய்யும் ஒரு பயிராக உள்ளது. அதனாலே பெரும்பாலான மலைவாழ் மக்களின் உணவில் உருளைக்கிழங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு முதலில் நிலத்தை உழுது தயார் செய்தவுடன் இயற்கை உரம் இடப்பட்டு அதன் பிறகு 10 அடி அளவில் பாத்திகள் எடுக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்தப் பாத்திகளுக்குள் விதைக்கிழங்குகள் ஒரு ஜான் இடைவெளிக்கு ஒன்று என்ற வீதத்தில் வைக்கப்பட்டு பின்னர் அந்தக் கிழங்குகள் மண்ணைக் கொண்டு மூடப்படுகிறது. அதன் பிறகு பூச்சிகள் ஏற்படாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டு 30 அல்லது 40 நாட்களில் மண் கட்டுதல் என்னும் முறையில் விதைக்கப்பட்ட கிழங்கிற்கு இரண்டு பகுதிகளிலும் மண் சேர்க்கப்படுகிறது. பின்னர் விதைக்கிழங்கு முளைவிட்டு உருளைக்கிழங்கின் இலைகள் வளர்கின்றது. இதையும் படிங்க: தசராவிற்கு நினைத்த வேடமெல்லாம் போட முடியாது… பக்தர்கள் ஏற்கும் வேடத்தின் காரணம் இது தான்… 70 அல்லது 80 நாட்கள் வரை நன்கு வளர்ந்த பின்னர் அந்த இலைகள் மண்ணை நோக்கிச் சாய்கின்றது. அதன் பின்னர் இலைகளுக்கு மருந்து தெளித்து உருக்கப்படுகிறது. 80 அல்லது 90 நாட்களில் மண்ணில் இருக்கும் உருளைக்கிழங்கை வெயில் நன்கு இருக்கும் நாட்களிலேயே விவசாய உபகரணங்களைக் கொண்டு மண்ணிலிருந்து கொத்தி எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் கிழங்குகள் மண்ணிலேயே காய வைக்கப்படுகிறது. அதன் பின்னர் உருளைக்கிழங்குகளைச் சாக்குப்பைகளில் அடைத்து வியாபாரத்திற்காக மேட்டுப்பாளையம் NCMS மற்றும் தனியார் உருளைக்கிழங்கு மண்டிக்கு எடுத்துச் செல்கின்றனர். இரவோடு இரவாகக் கொண்டு செல்லப்படும் உருளைக்கிழங்குகள் அங்குள்ள குடோன்களில் கொட்டி வைக்கப்பட்டு உலர வைக்கப்படுகிறது. அதன் பின்னர் காலையில் வியாபாரிகள் வந்தவுடன் ஏலம் முறையில் உருளைக்கிழங்கிற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதுகுறித்து உருளைக்கிழங்கு விவசாயி ஒருவர் கூறுகையில், “விதைக் கிழங்குகளை மேட்டுப்பாளையத்திலிருந்து கொண்டு வருகிறோம் அப்போதுதான் விலை சற்று குறைவாக இருக்கும். களை எடுக்கப்பட்டு, மாட்டுச் சாணம் இட்டு, மருந்து தெளித்து டிராக்டர் மூலம் உழவு செய்யப்படுகிறது. கிழங்கு போட்ட பின் 15வது நாளில் முளைக்க ஆரம்பிக்கிறது. 30வது நாளில் வேர்கள் இறுக்கமாக இருக்க மண்ணைக் கொண்டு அதனை மூடி விடுவோம். இதையும் படிங்க: 9 படியில் கொலு வைப்பதன் தத்துவம் இது தான்… ஊட்டியின் புகழ்பெற்ற கோவிலில் நவராத்திரி விழா… அதேபோல் 45 வது நாளில் மீண்டும் மண்ணைக் கொண்டு கிழங்கு செடிகளின் மீது சேர்த்து விடுவோம். 80 வது நாளில் கிழங்கு தயாராகிவிடும். 45 கிலோ கிழங்கு மூட்டை தற்போது 2 ஆயிரத்து 100 முதல் 2 ஆயிரத்து 200 வரை விற்பனையாகி வருகிறது. சுமார் 1,500க்கு மேல் விலை கிடைத்தாலே உருளைக்கிழங்கு சாகுபடிக்கு லாபம் கிடைக்கும். தற்போது 2 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆவதால் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ததற்கு நல்ல லாபம் தான்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.