BUSINESS

மும்பை குடியிருப்பில் எளிமையாக வாழும் ரத்தன் டாடாவின் தம்பி - யார் இந்த ஜிம்மி டாடா?

ரத்தன் டாடாவின் இளைய சகோதரரான ஜிம்மி டாடா தனக்கென ஒரு செல்போன் கூட வைத்துக் கொள்ளாமல், மும்பையில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். ரத்தன் டாடாவின் இளைய சகோதரரும், முன்னாள் டாடா சன்ஸ் தலைவர் நேவல் டாடாவின் மகனுமான ஜிம்மி நேவல் டாடா, தன்னைப் பற்றி பெரிதாக காட்டிக்கொள்ளாமல், ஊடகங்களின் கவனத்திலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறார். தனிப்பட்ட சூழலில் வாழ விரும்பும் இவருக்கு பொதுவெளியில் வர விருப்பம் இல்லை. மேலும் இவர் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் போன்ற முக்கிய டாடா குழும நிறுவனங்களில் முக்கிய பங்குதாரராக இருக்கிறார். குடும்பத் தொழிலை நிர்வகிப்பதில் வெற்றி பெற்ற ஜிம்மி நேவல் டாடா, மிகவும் நிம்மதியான மற்றும் சிக்கலற்ற வாழ்க்கையையே தேர்வு செய்திருக்கிறார். கணிசமான செல்வம் இருந்தபோதிலும், ஜிம்மி டாடா மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்துள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பில் வசிக்கிறார். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், அவர் தொலைபேசி இல்லாமல் வாழ்வதாக கூறப்படுகிறது, ஆனால் அவர் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள் வாசிப்பதில் தனது கவனத்தை செலுத்துவதாக சொல்கிறார்கள். ஜிம்மி மற்றும் ரத்தன் டாடா இடையேயான பிணைப்பு எப்போதும் வலுவானது. சமீபத்தில், ரத்தன் டாடா, 1945-ல் எடுக்கப்பட்ட இரு சகோதரர்களின் பழைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார், இது பல ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே இருக்கும் நல்ல பந்தத்தை பிரதிபலிக்கிறது. இதையும் படிக்க: சிம் கார்டு வாங்க இன்று முதல் புதிய விதிகள் அறிமுகம்.. என்னென்ன தெரியுமா? - முழு விவரம்! ஜிம்மி டாடா தனிப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாலும், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் போன்ற முக்கிய டாடா குழும நிறுவனங்களில் முக்கிய பங்குதாரராக இருக்கிறார். எனினும் கூட, குடும்ப தொழிலில் அவரது அமைதியான ஈடுபாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலுக்கு அப்பால் பார்க்கும்போது, ஜிம்மி டாடாவுக்கு ஸ்குவாஷ் விளையாட்டில் தனித்திறமை இருக்கிறது. ஹர்ஷ் கோயங்காவின் பழைய பதிவின்படி, ஜிம்மி டாடா கடுமையான போட்டியாளராக அறியப்படுகிறார். அவர் பெரும்பாலும் கார்ப்பரேட் உலகிற்கு அப்பால் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையும் படிக்க: Gold rate today: தொடர் சரிவில் தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஹேப்பி… இன்றைய நிலவரம் என்ன? ஜிம்மி டாடா மற்றவர்களின் கவனத்தில் இருந்து விலகி இருக்க விரும்பினாலும், டாடா மரபுடனான அவரது தொடர்பு அசைக்க முடியாதது. அவரது அடக்கமான வாழ்க்கை முறை மற்றும் டாடா குழும நிறுவனங்களில் தொடர்ந்த முதலீடு ஆகியவை குடும்பத்தின் வெற்றியில் அவரது பங்கை பிரதிபலிக்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.