கருவாடு உற்பத்தி பாதிப்பு பாம்பனில் வெயில் நன்றாக அடித்து, மழைக்காலம் நெருங்குவதாலும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு டன் கணக்கில் தயார் செய்யப்பட்ட கருவாடுகள்; புரட்டாசி மாதம் என்பதால் அதிகளவில் பொதுமக்கள், வியாபாரிகள் வாங்காமல் டன் கணக்கில் தயாரான கருவாடுகள் தேங்கி கிடப்பதாக உற்பத்தியாளர்கள் குமுறல். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென்கடலில் உள்ள மன்னார் வளைகுடா, வடக்குகடலில் உள்ள பாக்ஜலசந்தி கடலில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் மீன்களின் விலை பாதிக்கு பாதியாக சரிந்து உரிய விலை கிடைக்காமல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில படகுகள் மட்டும் தான் மீன்பிடிக்க செல்கின்றன. இதில் கருவாடிற்கு சுவையாக இருக்கக்கூடிய மீன்கள் ஏற்றுமதி போக பாதியை கருவாடாக்கி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலினைப் போல் இருப்பதால் டன் கிலோ கணக்கில் தயார் செய்து வருகின்றனர். ஆனால் காய வைத்த கருவாடுகளை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் வருவதில்லை, ஒரு சில வெளி மாவட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் மட்டும் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதையும் வாசிக்க: “பைப்ப திறந்தா தண்ணீர் வராது” - பிளாஸ்டிக் பாட்டிகள் தான் வரும்… மாணவர்களின் கைவண்ணத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு… ரூ.2 லட்சத்திற்கு மீன்வரத்து கொண்டு வந்து கருவாடு தயாரித்தால் ரூ.1.5 லட்சத்திற்கு கூட விற்பனை ஆகவில்லை. ரூ.250-க்கு விற்க்கப்பட்ட பண்ணா கருவாடு ரூ.200-க்கும், ரூ.1000-க்கு விற்ற சீலா கருவாடு ரூ.700-க்கு வாங்க வியாபாரிகள் இல்லை. இதனால் கருவாடு விற்பனை முற்றிலும் மந்தமாக உள்ளது. இம்மாதத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மழை காலத்தில் கருவாடு உற்பத்தி செய்வது கடினம்தான் முற்றிலும் கருவாடு வியாபாரம் பாதிப்படையும். தற்போது, உற்பத்தி செய்யப்படுவதை வைத்து மழைக்காலம் முடியும் வரை விற்பனை செய்யப்படும் கருவாடு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என வியாபாரி திரவியம் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None
Popular Tags:
Share This Post:
சபரிமலை சீசனில் அதிகரித்த சிப்ஸ் உற்பத்தி... மேட்டுப்பாளையத்தில் நேந்திரன் விற்பனை அமோகம்...
December 20, 2024மளிகை உள்ளிட்ட உங்களின் தினசரி தேவைகளுக்கு ஏற்ற சிறந்த 7 கிரெடிட் கார்டுகள்...!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 18, 2024
-
- December 18, 2024
-
- December 16, 2024
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்... ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்...
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.