BUSINESS

அதிரடி ஆஃபரில் கிடைக்கும் ஐபோன் 13.. இவ்வளவு கம்மியான விலையிலா? - வாங்குவது எப்படி?

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் புதிய ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியுது, ஆனால் அதிக விலை காரணமாக இந்த டிவைஸை அனைவராலும் வாங்க முடியாது. அதே நேரம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி இருந்தாலும் , அது குறைந்த விலையில் கிடைத்தால் அந்த ஐபோன் மாடலை சொந்தமாக்க விரும்புபவர்கள் பலர் இருக்கிறர்கள். இது போன்ற நபர் நீங்கள் என்றால் தற்போது ஐபோன் 13 சிறந்த டீலில் கிடைக்கிறது என்பதை இங்கே சொல்லுகிறோம். Flipkart தனது பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷல் விற்பனையில் தற்போது iPhone 13-ஐ ரூ.40,999 என்ற தொடக்க விலையில் விற்பனை செய்து வருகிறது, இது இதுவரை இல்லாத குறைந்த விலையாகும். கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அமேசான் ஐபோன் 13-ஐ ரூ.42,999-க்கு விற்கும் நிலையில் இதை விட குறைந்த விலையில் Flipkart ஒரு சிறந்த டீலை யூஸர்களுக்கு வழங்குகிறது. இதையும் படிக்க: செல்போன்ல இருக்கிற இந்த சிறிய துளைய கவனிச்சிருக்கீங்களா… எதுக்கு தெரியுமா? இது தவிர HDFC வங்கி கிரெடிட் கார்டி ற்கு ரூ.1,250 கூடுதல் தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் வழங்குகிறது, இது ஐபோன் 13 ஆரம்ப விலையை ரூ.39,749-ஆக குறைக்கும். எனவே, ஐபோன் 13 இப்போது ரூ.40,000 பிரிவின் கீழ் கிடைக்கிறது. HDFC கார்டு இல்லாவிட்டால், யூஸர்கள் UPI பரிவர்த்தனைகளை தேர்வு செய்தால் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். பழைய மொபைலின் கண்டிஷன் மற்றும் மாடலை பொறுத்து ரூ.23,650 வரை கூடுதல் தள்ளுபடியும் உள்ளது. இந்த டீல் மூலம் ஐபோன் 13 வாங்குவது லாபகரமானதா..? 40,000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் மொபைல்களில் வலுவான போட்டியாளராக iPhone 13 ள்ளது, இது 2024-ஆம் ஆண்டில் பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்குகிறது. மலிவு விலையில் iPhone-ஐ வாங்க நினைக்கும் ஆப்பிள் பிரியர்களுக்கு உண்மையில் இது சிறந்த டீல் தான். அடுத்தடுத்து பால் புதிய மாடல்கள் வந்தாலும் ஐபோன் 13 தொடர்ந்து iOS அப்டேட்ஸ்களை பெறுகிறது. கேமிங், மல்ட்டி டாஸ்கிங் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கான மென்மையான செயல்திறனை வழங்க இதில் A15 பயோனிக் சிப்செட் உள்ளது. இந்த மாடல் நீண்ட கால சாஃப்ட்வேர் சப்போர்ட் மற்றும் புதிய அம்சங்களுக்கான அணுகலை உறுதி செய்கிறது. சிறப்பான புகைப்படங்களை வழங்க கூடிய டூயல் கேமரா சிஸ்டம் இதன் தனித்துவ அம்சங்களில் ஒன்றாகும். இதில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது, எனினும் ப்ரோ மாடல்கள் மற்றும் புதிய ஐபோன்களில் காணப்படும் அதிக ரெஃப்ரஷ் ரேட் இதிலில்லை. பேட்டரி லைஃப் ஒருநாள் அல்லது அதற்கும் குறைவாகவே நீடிக்கும். எனவே 120Hz ஸ்கிரீன், மேம்பட்ட கேமராக்கள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்தால் நீங்கள் புதிய ஐபோன் மாடல்களைக் கருத்தில் கொள்வது நல்லது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.