BUSINESS

மண்புழுக்களைக் கொண்டு எப்படி உரம் தயார் செய்யப்படுகிறது தெரியுமா..?

மண்புழு உரம் புதுக்கோட்டை மாவட்டம், திருமலைராய சமுத்திரம், தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் சுமார் 15 வருடங்களாக மண்புழு உரம் தயாரித்து, அதனை விவசாயத்துக்கு பயன்படுத்தியும், அதோடு விவசாயிகளுக்கு மண்புழு உரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்தும் வருகிறார். மண்புழு உரம் தயாரிப்பு பற்றியும், மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முத்துலட்சுமியின் தொழில் முன்னேற்றம் பற்றியும் இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மக்கிய குப்பைகள் , சாணம் போன்றவற்றை வைத்து என்ன செய்து விட முடியும் என்றவற்றை தகர்த்தி ,அவற்றை பயன்படுத்தி விவசாயத்தை செழிக்க வைக்கவும் முடியும், அத்தோடு அதனை வியாபார உத்தியோடு கையாண்டு சுய தொழிலாக மாற்றவும் முடியும் என காட்டியுள்ளார், முத்துலட்சுமி. இது குறித்து அவர் பேசிய போது, நாங்க எங்க தாத்தா, பாட்டி காலத்துல இருந்தே தொழு உரம் போட்டு தான் விவசாயம் பண்ணுவோம். எனக்கு 15 வயசுல இருந்து புடிச்ச ஒரு தொழில் விவசாயம் தான். சிறு வயதில அப்போ இருந்தே விவசாயம் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். 30 வருடங்களாக உழவர் மன்ற அமைப்பாளராக இருந்தேன், அதுக்கப்புறம் உழவர் நண்பனா, அதுக்கப்புறம் ஆத்மா கமிட்டி மெம்பரா இருக்கேன். இந்த அமைப்புகளின் மூலம் எங்க ஊரு விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் 12 அடி நீளம் 4 அடி அகலத்தில் ஒரு பெட் கொடுத்தாங்க .அதோட அவங்களே மண் புழுவும் கொடுத்தாங்க. அதுல மண்புழு உரம் தயாரிச்சு 20 வருஷத்துக்கு முன்னாடி அத போட்டு நாங்க விவசாயம் பண்ணோம். அத போட்டு விவசாயம் பண்றப்போ என்ன ஆச்சுன்னா உர செலவு கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுடுச்சு. இப்போ வேற உரமே போடுறது இல்ல. அதோடு, வேளாண்மைத் துறை அலுவலகம் மூலம் கண்டுணர் பயணம் என்ற தலைப்பில் பயிற்சி வழங்குதல் பயணம் போனோம். நாமக்கல், கோயம்புத்தூர் அங்கலாம் பயிற்சிகளுக்கு சென்றோம். அங்க என்ன புழுவெல்லாம் விட்டால் எவ்வளவு உற்பத்தி வரும் அதெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. அசினியா புழு, அமெரிக்கன் புழு போன்ற மண் புழு வகைகளையும் சொல்லிக் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் வேளாண்மை துறை மூலமா ஒரு லட்ச ரூபாய் மானியம் தர்றோம், நீங்க 20 பேரா குழு ஆரம்பிச்சு இந்த மண்புழு உரத்த உற்பத்தி செஞ்சு விவசாயிகளுக்கு வியாபாரம் பண்ணுங்க ,அதுல உங்களுக்கு வருமானமும் வரும் அதோட விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறி மக்களுக்கு நஞ்சு இல்லாத உணவும் கிடைக்கும், அப்படின்னு சொன்னாங்க . அதேபோல, நாங்களும் ஒரு இருபது பேரா சேர்ந்து குழுவாக ஆரம்பிச்சு 2023 ல ஒரு லட்ச ரூபா மானியத்தை வாங்கினோம். அத வச்சு மண்புழு உரம் தயாரிக்க செட் அமைச்சு தரமான குப்பைகளை வாங்கி, மண்புழுக்களையும் நாமக்கல்லில் இருந்து வாங்கி தயார் பண்ண ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் அத விற்று 50 ஆயிரம் ரூபாய் வரை தற்போது எங்களிடம் இருப்பு வைச்சுருக்கோம். இதையும் வாசிக்க: Organic Farmer Awards: இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செஞ்சவங்களா நீங்க… ₹1 லட்சம் பணத்தை அள்ள வாய்ப்பு… இதுவரை 10 டன் வரைக்கும் மண்புழு உரத்தை வித்து இருக்கோம். வேளாண்மைத் துறையில் இருந்தும், சில விவசாயம் சார்ந்த மீட்டிங் செல்லும் இடங்களில் எல்லாம் மண்புழு உரம் பற்றி விவசாயிகளுக்கு சொல்லி எங்களிடம் உள்ளது வாங்கிக்கோங்க, என்று சொல்லி எங்க போன் நம்பர் குடுத்துட்டு வருவோம். அது மூலமா விவசாயிகளும் எங்ககிட்ட வந்து வாங்கிட்டு போறாங்க. இப்போ விவசாய சீசன் இல்லாததால, எங்ககிட்ட ஒன்றரை டன் இருக்கு. அதோட ரெண்டு டன் உற்பத்திக்கு போட்டு இருக்கோம். தற்போது புதுக்கோட்டையில கொடுத்துட்டு இருக்கோம். இது நல்லா ரீச் ஆன எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சுடுவோம். மண்புழுக்களைக் கொண்டு உரம் தயாரிக்கும் செய்முறை: மண்புழு உரத்த தயாரிக்க மக்கிய தொழு உரத்த வாங்கி,அதை வெயில்ல நல்லா காய வச்சுக்கணும், காயவச்ச தொழு உரத்த நல்லா நச்சி தூள் பண்ணி எடுத்துக்கணும். அத குளிர்ச்சியான இடத்துல வச்சு தண்ணி தெளிச்சு வைக்கணும். அந்த மாதிரி உரம் குளு குளுன்னு இருக்கும் போது தான் மண்புழுவை அந்த உரத்தில் விடனும். மண்புழுவை விட்டதுக்கு அப்புறம் பச்சை சாணத்தையும் கருப்பட்டியையும் கலந்து மேலே தெளித்து விடனும். 2 கிலோ 45 நாள்ல ரெடி ஆகிடும். 1 கிலோ போட்டோம்னா 60 நாள்ல ரெடி ஆகிடும். மண்புழுவின் தரத்தை பொறுத்து சீக்கிரமா உரம் ரெடி ஆயிடும் அது தயாராயிடுச்சு அப்படிங்கிறத எப்படி கண்டுபிடிக்கணும்னா அந்த மண்புழு அந்த உரத்த எல்லாம் சாப்பிட்டு டீ தூள் பதத்துக்கு வந்துடும். கைய வச்சு பார்த்தா தெரிஞ்சுடும் முதல் அறுவடை ஐம்பது நாள்ல பண்ணிடலாம். அதுக்கப்புறம், 20 நாள் கழிச்சு இரண்டாவது அறுவடை மூன்றாவது அறுவடை செஞ்சுக்கலாம் அதுக்கப்புறம் புழு எல்லாம் சலிச்சு எடுத்து வச்சிட்டு அடுத்த முறைக்கு அந்த புழுவை பயன்படுத்திக்கலாம். இப்படி தயாராகிற மண்புழு உரத்த, ஒரு டன் பத்தாயிரம் ரூபா வித்தாலும் கூட நமக்கு 2500 ரூபாய் வரைக்கும் லாபம் இருக்கு, இதே 10 டன் செஞ்சா 15 ஆயிரம் வர லாபம் பெறலாம். லாபம் மட்டும் இல்லாம இயற்கை முறையில் விவசாயம் செஞ்சு நஞ்சில்லா உணவ மக்களுக்கு கொடுக்கலாம் என்கிறார் முத்துலட்சுமி. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.