ENTERTAINMENT

முஃபாசா த லயன் கிங்... படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து இதோ..!!

தண்ணீரை கண்டாலே பயப்படும் குட்டிச் சிங்கமான முஃபாசா ஒரு வெள்ளம் வரும்பொழுது தனது பெற்றோரை காப்பாற்ற முடியாமல் இழக்க நேரிடுகிறது. வேறு ஒரு இடத்துக்கு அடித்துச் செல்லப்படும் முஃபாசாவை முதலைகளிடம் இருந்து இன்னொரு சின்ன சிங்கமான டாக்கா காப்பாற்றுகிறது.டாக்கா தனது பெற்றோரிடம் முஃபாசாவை அழைத்து செல்ல அங்கே இருவரும் அண்ணன் தம்பியாகவே வளர்கின்றனர்.வெள்ளை சிங்கம் கூட்டம் ஒன்று இவர்கள் இருக்கும் பகுதியை தாக்க யானைக் கூட்டத்தின் உதவியோடு முஃபாசா அவற்றை ஓடவிடும் காட்சிகள் திரையரங்கில் பார்க்கும்போது வேற லெவல். ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்கள் எல்லாம் வெறும் குழந்தைகளுக்கான படமாக இருப்பதில்லை அந்த வகையில்சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்று நிறைய பேர் சொல்வார்கள் ஆனால் முஃபாசா படத்தில்யார் மக்களை காப்பாற்றுகிறானோ அவன் தான் தலைவன் என்கிற மெசேஜ் எல்லாம் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. மேலும் முதல்பாகத்தை பார்த்து விட்டு தான் இந்த பாகத்தை பார்க்கணும் வேண்டும் என்று இல்லை. இது முஃபாசாவின் தனி கதை என்பதால் அனைவருக்கு புரியும்படியாகவே திரைக்கதை அமைந்து இருக்கிறது. இதையும் வாசிக்க : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம்.. பெண்கள் மட்டும் இழுக்கும் தேர்த்திருவிழா இந்தப் பாகத்தில் முஃபாசாவிற்கு அர்ஜுன் தாஸும், டாக்காவுக்கு அசோக் செல்வனும் குரலுதவி செய்திருக்கிறார்கள். நாசர் ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, விடிவி கணேஷ் டப்பிங் செய்து இருக்கிறார்கள். முதல் பாகத்தில் தமிழ் டப்பிங் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் இரண்டாம் பாகத்திற்கு தமிழ் டப்பிங்கில் அசத்தி இருக்கிறார்கள். படக்குழு அனிமேஷனில் வேற லெவலாக ஒர்க் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக 3டி காட்சியில் படத்தின் ஆரம்பத்தில் யானை மோதி அணை உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லும் முபாசா கடைசி வரை தண்ணீருக்கு பயந்து இருக்கும் காட்சி திரையில் சீட் எட்ஜில் படம் பார்க்கும் நாம் வந்து விடுகிறோம். படத்தின் அனிமேஷன் வேலைகளுக்காகவே படத்தை திரையில் பார்க்கலாம்.மேலும் இந்த விடுமுறை நாட்களுக்கு குழந்தைகளுக்கு ஒரு ட்ரீட் தான் இந்த முபாசா. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.