TAMIL

அப்பா-மகன் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

Why Father Son Relationship Is Strained : இந்தியாவில் பெரும்பாலான அப்பா-மகன் உறவுகள் எப்போதும் எதிரும் புதிருமாக இருப்பதை பார்த்திருப்போம். அல்லது நம் வீட்டில், நாம் அப்பாவுடன் இருக்கும் உறவும் கூட அப்படி ஒரு பாசத்தை காட்டத் தெரியாது உறவாக, எப்போதும் முரண்பட்ட உறவாக இருக்கலாம். அதற்கான காரணங்கள் குறித்து இங்கு பார்ப்போம். கலாச்சார மற்றும் உணர்ச்சி ரீதியான இடைவேளை: இந்தியாவில் உள்ள குடும்பங்களில் இருக்கும் தந்தைகள்தான் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற சில கலாச்சார அழுத்தங்கள் அவர் மீது இருக்கிறது. அதேபோல, பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர்கள் பல சமயங்களில் தங்கள் உண்மையான பாசத்தை குடும்பத்தினரிடம் காட்டாமல் இருக்கின்றனர். இவ்வாறான சில கலாச்சார கட்டமைப்புகள் ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினால் அவர்களை பலவீனமானவர்களாக பார்க்கிறது. ஆனால் இவர்கள் தங்களின் உணர்வுகளை பிள்ளைகளிடையே காட்டத் தவறுவதால் இவ்வாறான உணர்ச்சி ரீதியான இடைவேளை ஏற்படலாம். தலைமுறை இடைவேளை: தந்தைக்கும் மகனுக்கும் பெரிதாக வயது வித்தியாசம் இருக்கும். ஒரு தலைமுறையினர் புரிந்து கொண்ட விஷயங்களை அடுத்த தலைமுறையினர் புரிந்து கொள்வர் என்ற அவசியம் இல்லை. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தந்தை மகனுக்கு இடையே பெரிய இடைவேளையை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு தந்தை கலாச்சார ரீதியாக ஒழுக்கமானவராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், மகன் தனக்கு பிடித்தார் போல் தனித்து முடிவெடுக்க வேண்டும் என்று விரும்பினால் அங்கு பிரச்சனை வரும், உறவும் கொஞ்சம் அடி வாங்கும். எதிர்பார்ப்புகள்: பெற்றோர்கள் பெரும்பாலான சமயங்களில் தங்களின் குழந்தைகள் மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைக்கின்றனர். படிப்பு ரீதியாக, வேலை ரீதியாக, திருமணம் போன்ற பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படும் பெரிய விஷயங்களை தான் எதிர்பார்ப்பதை தனது மகன் செய்ய வேண்டும் என சில தந்தைகள் நினைப்பார். இது ஒரு விதத்தில் அந்த மகனின் மீது சில அழுத்தங்களை உண்டாக்கும். தனக்கு மரியாதை அற்றது போன்று உணரும் அந்த மகன், தனது தந்தை என கூறினாலும் அதை கேட்க வேண்டாம் என்பது போன்ற முடிவை எடுத்து விடுவார். பேசிக் கொள்வதின் பிரச்சனை: பலருக்கு தங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை வாயால் சொல்லவே வராது. அதிலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றாலும், ஒரு சண்டையை தீர்க்க வேண்டும் என்றாலும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு இருக்காது. இது, உறவுக்கும் பொருந்தும். தங்களுக்குள் ஏற்படும் சண்டைகளை பற்றி அவர்கள் பேசாமலேயே போய் விடுவதால் அது ஒரு கட்டத்தில் வளர்ந்து ஏதேனும் ஒரு பெரிய பிரச்சினையாக வெடித்து விடும். இதனால் இருவரும் எதிரும் புதிருமாக மாற வாய்ப்பு உண்டு. மனநல ஆலோசனை குறித்த தவறான புரிதல்: இங்கிருக்கும் பலருக்கு மனநல ஆலோசனை என்றால் அதில் மன நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறை என்ற தவறான புரிதல் இருக்கிறது. ஒரு உறவை இது போன்ற ஆலோசனை மூலமாகவும் கட்டிக்காக்க முடியும். ஆனால் இந்த தவறான புரிதல காரணமாக பலர் இதனை எடுத்துக் கொள்ள முன்வருவதில்லை. மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!! மேலும் படிக்க | தந்தை இறந்த பின்... மகன் பெயருக்கு பைக் RC-ஐ மாற்ற என்ன செய்யணும்? செய்யாவிட்டால் சிறை தான்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.