TAMIL

ஜீவா நடித்த அகத்தியா படத்தின் டீசர் வெளியீடு! பான்-இந்திய அளவில் ரிலீஸ்..

தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் "அகத்தியா" படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும், இந்த ஃபேண்டஸி திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த டீசர் அகத்தியா திரைப்பட மாயாஜால உலகத்தின் பரபரப்பான காட்சி அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. திகில், சஸ்பென்ஸ் ஜானரில் ஃபேண்டஸி கலந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். "ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் "அகத்தியா" படத்தினை, புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ், படம் குறித்துக் கூறியதாவது.. “ஃபேண்டஸி-திகில் வகை ரசிகர்களை இந்த டீசர் வெகுவாக வசீகரித்து வருகிறது. - நமது கலாச்சாரத்தினை மிக ஆழமாகப் பிரதிபலிக்கும் அதே வேளையில், மிகவும் பிரபலமான உலகளாவிய பிளாக்பஸ்டர்களுக்கு போட்டியாக, ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த படம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். முன்னணி நடிகர் ஜீவா இப்படம் குறித்துக் கூறியதாவது... "ஒரு ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள், என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது மிக மிகப் புதிதானது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் உங்களை அழைத்துச் செல்லும். முன்னணி நட்சத்திர நடிகை ராஷி கண்ணா கூறியதாவது... “நான் ஸ்கிரிப்டைக் கேட்ட கணம், கதையின் பிரம்மாண்ட உலகைக் கேட்டுச் சிலிர்த்துப் போனேன். அகத்தியா நான் முன்பு செய்த எந்தப் படத்தையும் போல் இல்லாமல், அசத்தலான காட்சிகள் மற்றும் நம்பமுடியாத இசை, பிரம்மாண்ட புதிய உலகம் எனப் பார்வையாளர்களைக் கண்டிப்பாகக் கவரும் என்று நம்புகிறேன். டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட , தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்), அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, மகத்தான படைப்பான "அகத்தியா" திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. சினிமா ஆர்வலர்களே தயாராகுங்கள், ஒரு முழுமையான ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்துச் செல்லும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான அகத்தியா திரைப்படம், ஜனவரி 31, 2025 அன்று வெளியாகிறது.\ மேலும் படிக்க | விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்! மீனாட்சி சௌத்ரி பகீர் பேச்சு. மேலும் படிக்க | விஷாலுக்கு என்ன ஆச்சு? கை நடுக்கம், குரலில் தடுமாற்றம்..இதுதான் காரணம்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.