TAMIL

ஓய்வூதியர் அடையாள அட்டை புதிய அப்டேட் தொடர்பாக தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Pensioners ID Latest News in Tamil: ஓய்வூதியர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? ஓய்வூதியர்கள் அடையாள அட்டை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதைக் குறித்து பார்ப்போம். மத்திய மற்றும் மாநில அரசின் சார்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்புகளும், புதிய நடைமுறை விதிகள் சார்ந்தும் தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் அடையாள அட்டை குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிஓடி (DoT) ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஓய்வூதியர் அடையாள அட்டை (பென்ஷனர்ஸ் ஐடென்டிட்டி கார்டு - Pensioners Identity Card) பெற விண்ணப்பம் செய்வது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகளை (Pensioners Identity Card) வழங்குவதாக பிஆர்.சிசிஏ (DoT தமிழ்நாடு சர்க்கிள் (Tamil Nadu Circle) அலுவலக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஓய்வூதியர்கள் அனைவரும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அந்த படிவத்துடன் சேர்த்து இரண்டு புகைப்படம் அனுப்பப்பட வேண்டும். ஒன்று அந்த படிவத்தில் ஒட்டப்பட வேண்டும் மற்றொன்று தனியாக கவரில் போட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். இரண்டாவதாக பிபிஓ (பென்ஷன் பேமென்ட் ஆர்டர்) நகல் அனுப்பி வைக்க வேண்டும். மூன்றாவதாக ஓய்வூதியர் அடையாள அட்டை படிவம் மற்றும் பிபிஓ நகலுடன் சேர்த்து உங்கள் ஆதார் அட்டை நகலையும் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இருக்கக்கூடிய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஸ்பீடு போஸ்ட் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர் அடையாள அட்டை விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி எது? CCA -Pension Office Address, Deputy Controller of Communication, Accounts (Pension), DOT Cell, Office of Principal CCA, Tamil Nadu Circle, TNT Complex, 1st Floor, No-60, Ethiraj Salai, Egmore, Chennai-600008. மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோ மேலும் படிக்க - கடைசி காலத்தில் கூடுதல் பென்ஷன் வேண்டுமா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்! மேலும் படிக்க - வருமான வரி பிடித்தம் | 60-80 வயது ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.