TAMIL

உடல் எடையை சட்டு புட்டுனு குறைக்க... விரதம் முதல் சாப்பாட்டு நேரம் வரை - முக்கிய டிப்ஸ் இதோ!

Weight Loss Health Tips: உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. உடல் பருமன் தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உரியதாக மாறி உள்ளது. உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணம், மோசமான உணவுப்பழக்கமாகும். குறிப்பாக, மோசமான உணவுப்பழக்கம் உடலில் கொழுப்புகள் சேர வழிவகுக்கும். மேலும் உங்களின் பசியை அதிகப்படுத்தி அதிக உணவுகளை உட்கொள்ள வழிவகுக்கும், வளர்ச்சிதை மாற்றமும் தடைப்படும். எனவே, உணவுப்பழக்கவழக்கங்களில் நீங்கள் சிறு சிறு மாற்றங்களை செய்தாலே உடல் எடை குறைப்பில் பெரும் தாக்கம் இருக்கும். உணவுப்பழக்கவழக்கத்தில் சரியான வழிமுறைகளை பின்பற்றும்பட்சத்தில், செரிமானம் அதிகமாகும்; தேவையில்லாமல் பசி எடுக்காது; கொழுப்புகள் கரையும் செயல்முறை வேகமெடுக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு சாப்பிடும் நேரங்களில் இந்த சிறு சிறு வழிமுறைகளை பின்பற்றினாலே உடல் எடை குறைப்பில்ல நல்ல மாற்றங்கள் வரும். விரதம் இருக்கலாம் Intermittent Fasting என்ற விரதம் இருக்கும் செயல்முறையை நீங்கள் பழகினால் உடல் எடை குறைப்பில் பேரூதவியாக இருக்கும். அதாவது, இந்த செயல்முறையில் 5 நாள்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உங்களுக்கு வேண்டிய அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம். அதன்பின் 2 நாள்கள் எவ்வித உணவையும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். மேலும் படிக்க | 2025ல் உங்கள் உடலை ஆரோக்கியமான எடையுடன் வைத்திருக்க இந்த 7 பழக்கங்களுக்கு குட்பை சொல்லுங்க! இந்த விரதம் உடல் எடை குறைப்பில் அதிக நன்மையை அளிக்கும். விரதம் இருப்பது உடலில் இன்சுலின் சுரப்பதை சீராக்கி உடலில் கொழுப்பு கரைப்பதை வேகப்படுத்தும். நேரம் முக்கிய அமைச்சரே.. தூங்கி எழுந்த ஒரு மணிநேரத்தில் காலை உணவை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்கிறார்கள். இதனால், காலை உணவை இப்படி சாப்பிடுவதால் நீங்கள் அதிகமாக உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல இரவு நேரத்திலும் குறைவான அளவில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது தூங்குவதற்கு 3 மணிநேரம் முன்பு உணவை எடுத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் நீங்கள் உண்ட உணவு எளிதாக செரிமானம் அடையும். நள்ளிரவில் நொறுக்குத்தீனி உண்ணும் பழக்கத்தை தவிர்க்கவும். இந்த பழக்கங்கள் உடல் எடை குறைப்பில் உதவும். நீரேற்றமாக இருங்கள் குறைந்தது ஒரு நாளுக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்த வேண்டும். இதன்மூலம், உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகமாகி கொழுப்பு கரைவது வேகமடுக்கும். மேலும் கிரீன் டீ, மூலிகை டீ ஆகியவற்றை குடிப்பதாலும் கொழுப்புகள் குறையும். இந்த உணவுகளை சாப்பிடுங்க புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் வயிறு நிறைவு ஏற்படும். மேலும் மதிய நேரத்தில் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் இருப்பதற்கும் இது வழிவகுக்கும். குறிப்பாக மீன், முட்டை, மாட்டிறைச்சி, பன்னீர், பருப்பு அதிகம் இருக்கும். இது உங்களுக்கு அதிக நேரத்திற்கு பசி எடுக்க வைக்காது. (பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை) மேலும் படிக்க | HMPV வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள் இது தான்! ஜாக்கிரதை! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.