Good Bad Ugly Release Date : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர், நடிப்பில் விடாமுயற்சி படமும் குட் பேட் அக்லி படமும் உருவானது. இந்த நிலையில், முதலாவதாக விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வர இருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், அடுத்ததாக அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி: குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இவர், தமிழ் திரைப்பட இயக்குநர் என்பதை தாண்டி, அஜித்தின் தீவிர ரசிகரும் கூட. இவரை வைத்து பல நாட்களாக படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர், ஒரு வழியாக அதனை குட் பேட் அக்லி படம் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே, இடையில் இந்த படத்திலும் சைன் செய்தார். இதில், அஜித்திற்கான காட்சிகள் சுமார் 3 மாதங்களுக்குள் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Maamey...date locked for VERA LEVEL ENTERTAINMENT #GoodBadUgly is coming to the BIG SCREENS on 10th April, 2025 #AjithKumar @MythriOfficial @Adhikravi @suneeltollywood @AbinandhanR @editorvijay @GoodBadUglyoffl @supremesundar … pic.twitter.com/NEdR5kZM1y — Suresh Chandra (@SureshChandraa) January 6, 2025 வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக அஜித் சார்பில் அவரது செயலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர். தள்ளிப்போன விடாமுயற்சி படம்! துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் கமிட் ஆன படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், இந்த படத்தின் வேலைகளோ, ஆமை வேகத்தில்தான் நடந்தது. அஜித் பைக் டூர் கிளம்பியதால் ஷுட்டிங் தாமதமானதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக ஓராண்டுக்கும் மேல் ஆனாலும், அஜர்பைஜானில் கொஞ்சமும், இந்தியாவில் கொஞ்சமும் எடுத்து முடிக்கப்பட்டது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. படம் வரப்போவதை எண்ணி, ரசிகர்கள் அனைவரும் குஷியில் புத்தாண்டை கொண்டாட காத்திருக்க, 2025 பிறப்பதற்கு அரை மணி நேரம் இருக்கும் போது “படம் பொங்கலுக்கு வெளிவராது” என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. இதை கேட்டவுடன் ரசிகர்கள் கடுப்பின் உச்சிக்கே சென்றனர். காரணம் என்ன? விடாமுயற்சி படம் வெளியாவததற்கு இன்னும் வேலைகள் முடிக்கப்படாததுதான் காரணம் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், லைகா நிறுவனம் நிதி பிரச்சனையில் சிக்கியிருப்பதால் இந்த ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது அந்த படக்குழுவிற்கே வெளிச்சம். ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம், குட் பேட் அக்லி படத்தை தயாரித்த கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸை கேட்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் சில சலசலப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த வருடம் அஜித் படம் வெளியாவது உறுதியாக இருந்தாலும் எதை முதலில் வெளியிடுவது என்ற குழப்பம் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிக்க | விடாமுயற்சி-குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்? மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி என்ன? ‘இந்த’ மாதத்தில் வெளியாக வாய்ப்பு! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.