TAMIL

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து கடந்த சில தினங்களாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் வரும் ஜனவரி 10 முதல் ஜனவரி 13 வரை 4 நாட்களுக்கு சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு மொத்தமாக 14,104 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு உதவ இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு - பழனியில் பரபரப்பு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜனவரி 11 முதல் ஜனவரி 19 வரை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளதால் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருகைக்கு இடமளிக்கும் வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு பேருந்து சேவைகளுக்கான குறிப்பிட்ட வழித்தடங்கள் மற்றும் இடங்களை போக்குவரத்து துறை தேர்வு செய்துள்ளது. உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களுக்குச் செல்லும். கோயம்புத்தூர்க்கு ECR வழித்தடத்திலும், சென்னையில் இருந்து பேருந்துகள் காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி, பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை போன்ற இடங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும், மற்ற அனைத்து பேருந்து சேவைகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக ஜனவரி 15 முதல் 19ம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய மூன்று முக்கிய பேருந்து நிலையங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இங்கிருந்து அரசு பேருந்துகள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கும். பொங்கல் பண்டிகையின் போது 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் வழக்கமான இயக்கப்படும் பேருந்துகளை தவிர, கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக 5,736 கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துத் துறை இயக்க உள்ளார். மக்களுக்கு உதவ காவல்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆம்னி பேருந்து சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய அவர்களுடன் கலந்தாலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது அதிக கட்டணம் வசூலித்தால் பொது மக்கள் 1800 அல்லது 044-26280455 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் சாலையில் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கடுமையான அறிவுறுத்தல்களும் உள்ளன. 2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.