Canadian Prime Minister Justin Trudeau News In Tamil: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? ஜஸ்டின் ட்ரூடோ எப்பொழுது பதவியை ராஜினாமா செய்வார்? கனடா அரசியல் குறித்த விவரங்களை பார்ப்போம். கனடாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர் உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். அப்போது தொடங்கி இந்தியா-கனடா உறவில் தொடர்ந்து விரிசல் நீடித்து வருகிறது. இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக கனடா பத்திரிகைகள் செய்தி வெளியிட ஆரம்பித்தனர். இந்தியா பற்றி ஆதாரமின்றி கனடா பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது உளவுத் துறையில் உள்ள சில கிரிமினல்களின் வேலை அது என கேஷுவலாக பதில் சொன்னார். அரசின் மிக ரகசியமான விஷயம் என்ற பெயரில் பத்திரிகைகளுக்கு கிரிமினல்கள் தரும் செய்திகள் தவறாக வந்துள்ளது . இதில் ஏதேனும் சதி இருக்கலாம். எனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கனடா மக்களை பாதுகாப்பதுதான் என் முதன்மைப் பணி. அதை செய்து வருகிறேன் என ட்ரூடோ பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து சில காலமாக அவரது செயல்பாடு கனடாவுக்கு உள்ளேயும் விமர்சனத்துக்கு ஆளானது. அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயக கட்சி ஆதரவு தர மறுத்தது. இதனால் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஏற்கனவே சர்வதேச நெருக்கடிகளை ட்ரூடோ சந்தித்து வரும் நிலையில், உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வந்தது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வி அடைந்து விட்டார். அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளோம் என அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் எழ ஆரம்பித்தது. இதனையடுத்து வரும் புதன்கிழமை (ஜனவரி 8, 2025) ட்ரூடோவின் லிபரல் கட்சி கூட்டம் நடக்கிறது. அதில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் இடைக்கால பிரதமர் யார் என்பது பற்றியும் முடிவெடுக்கப்படும். அதன் பின்னர் ட்ரூடோ பதவி விலகலை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபரில் கனடா பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பே ட்ரூடோ பதவி விலகுவார் என கூறப்பட்ட நிலையில், அது இப்போதே நடக்க உள்ளது. இந்த வாரத்தில் அவர் பதவி விலகலை அறிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகிய நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவி ராஜினாமாவை குறித்து, "நாடு தழுவிய வலுவான, போட்டி செயல்முறை மூலம் கட்சி தனது அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்த பிறகு, நான் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன்" என்று அவர் இன்று (ஜனவரி 06, திங்கள்கிழமை) செய்தி மாநாட்டின் போது கூறினார். நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் "நான் லிபரல் கட்சியின் தலைவரிடம் அந்த செயல்முறையைத் தொடங்கும்படி கேட்டேன். அடுத்த தேர்தலில் ஒரு உண்மையான தலைவரை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் நான் உள்நாட்டு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்தால், அந்தத் தேர்தலில் நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்பது எனக்கு தெளிவாகி விட்டது. எனவே ஆளும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், ஆனால் அக்டோபர் இறுதியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நான் நீடிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க - இந்தியா கனடா மோதல்: அடிவாங்கும் பொருளாதாரம், கண்டுகொள்ளாத அமெரிக்கா.... குழம்பும் கனடா!! மேலும் படிக்க - 'நாங்கள் மிரட்டவில்லை...' ஜஸ்டின் - ஜின்பிங் அதிருப்தி வீடியோ; விளக்கமளித்த சீனா மேலும் படிக்க - கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.