TAMIL

ஆளுநர்காக சட்ட பேரவை மரபுகளை மாற்ற முடியாது - சபாநாயகர் அப்பாவு அதிரடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் எத்தனை நாள் நடைபெறும் என்பதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்று முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் கூடியது. நாளை மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெறும், முதல் மூன்று நாட்கள் கேள்வி நேரம் இருக்கும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை நடந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்ணா பல்கலைக்கழக வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் பேசும் போது தான் பதாகைகளைக் காட்டினர். நானோ முதலமைச்சரோ பேசிய போது பதாகையை காண்பிக்க வில்லை. பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு - பழனியில் பரபரப்பு ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வெளியேற்றினோம். அதிமுகவினரிடம் தான் கேட்க வேண்டும், கவர்னர் உரை நடைபெறும் நாள் அவை நாட்களில் கணக்கில் வராது. ஆளுநர் உரை வாசிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டேன். அரசியலமைப்பு சட்டத்தின் மரபுப்படி சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்த முறைப்படி அழைப்பு விடுக்க சென்றேன். அவரும் முறைப்படி எல்லா கௌரவம் அளித்து வருவதற்கு தெரிவித்தார், சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் பாடுவது தான் மரபாக உள்ளது. சட்டமன்ற மரபு இந்திய அரசியலமைப்பிலும் ஆளுநர் கோரிக்கை இருக்கிறதா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். தமிழ்தாய் வாழ்த்து தமிழர்களின் அடையாளம், மரபுகளை மாற்ற மாட்டோம் மாற்ற முடியாது. 1995ல் முன்னாள் ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்றும் ஆளுநர் நியமிக்க வேண்டும் எனில் தன்னிடம் கேட்க வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களால் மட்டுமே அவையில் கருத்து சொல்ல முடியும். ஆளுநர் உரையை வாசிக்க விருப்பம் இல்லாததால் அவர் இப்படி செய்தார். சம்பிரதாயத்திறிக்காகவும் தமிழர்களுடைய பண்பும் முதல் கூட்டல்திற்கு ஆளுநரை அழைக்க வேண்டும் என்பது தான், அரசியலைப்பிற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது ஒன்றிய அரசு ஆட்சி செய்யும் இடத்தில் இப்படி உள்ளதா? ஆளுநர் தான் கூறினார் மதசார்பற்ற நாடு என பொதுவெளியில் கூறினார். ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பை காட்டியதால் வெளியேற்றினோம். அடுத்தமுறை இதே ஆளுநர் இருந்தாலும் அழைப்பேன். தெலுங்கானாவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக இருந்தபோது அழைக்கலாம் நடத்தினர். இதனால் அங்கு பாதிப்பு இருக்கிறதா? திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தும் இதே முறையை தான் தொடர்வோம். ஆளுநருக்கு எதிராகத்தான் அவர்கள் காண்பித்ததாகத்தான் நான் உணர்ந்துக் கொண்டேன். சட்டப்பேரவை கூட்டத்தில் அவர்கள் கலந்துக் கொள்ளலாம். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை வராதது தொழிற்நுட்ப கோளாறு இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார். 2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.