TAMIL

விஜய் படத்தில் நடித்து மன அழுத்தம்தான் மிச்சம்! மீனாட்சி சௌத்ரி பகீர் பேச்சு..

Meenakshi Chaudhary About The GOAT Movie : தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மீனாட்சி செளத்ரி. இவர், கடந்த ஆண்டு வெளியான தி கோட் படத்தில் இவர் 2 கதாநாயகிகளுள் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த பிறகு இவர் 1 வாரம் மன அழுத்தத்தில் இருந்ததாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். யார் இந்த மீனாட்சி செளத்ரி? ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சௌத்ரி , திரையுலகிற்கு முதலில் அறிமுகமானது தெலுங்கு படத்தின் மூலமாகத்தான். 2018ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்ற இவர், பல் மருத்துவம் படித்தவர். அது மட்டுமன்றி இவர் மாநில அளவில் நீச்சல் போட்டியிலும் பேட்மிண்டன் போட்டியிலும் வெற்றி பெற்றவராக இருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கில் சில சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்த இவருக்கு, தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் முதலில் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக தி கோட் படத்தில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மீனாட்சி செளத்ரி பார்க்க கொஞ்சம் உயரமாக இருப்பதும், தனித்துவமான அழகுடன் இருப்பதாலும் பிற ஹீரோயின்கள் மத்தியில் ஸ்பெஷலாக இருக்கிறார். தி கோட் படத்தால் மன அழுத்தம்! விஜய் ஹீரோவாக நடித்திருந்த தி கோட் படத்தில் மீனாட்சி செளத்ரி இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். ஸ்ரீனிதி எனும் கதாப்பாத்திரத்தில் வந்த இவருக்கு சிறிய ரோல் கொடுக்கப்பட்டதாக இவரது ரசிகர்கள் கருதினர். இதற்கு முன்னர் இவர் நடித்திருந்த குண்டூர் காரம் படத்திலும் இவருக்கு சிறிய கதாப்பாத்திரமே கிடைத்தது. இதையடுத்து, கோட் படம் வெளியானவுடன் தான் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டதாகவும், இதனால் 1 வாரத்திற்கு தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கும் அவர், “நான் விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்த பிறகு பலரால், பலவாறு ட்ரோல் செய்யப்பட்டேன். இதனால் ஒரு வாரம் டிப்ரெஷனுக்குள் சென்று விட்டேன். ஆனால், லக்கி பாஸ்கர் படத்திற்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. அப்போதுதான் இனி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது” என தெரிவித்திருக்கிறார். தி கோட் படம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதே தவிர, விஜய்க்கு பிற ரசிகர்கள் அதிகமாக இருக்கும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது. இதில், மீனாட்சி செளத்ரி தி கோட் படம் குறித்து பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. இனி வரவிருக்கும் மீனாட்சியின் படங்கள்: மீனாட்சி, லக்கி பாஸ்கர் படத்திற்கு பிறகு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இதில் ஒரு படம், சங்கராந்தி வஸ்துனம். இந்த படத்தில் மீனாட்சியுடன் ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு நவீன் பொலிஷெட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதனால், 2025-ல் வெற்றி பெறும் ஹீரோயினாக இவர் வலம் வருவார் எனக்கூறப்படுகிறது. மேலும் படிக்க | யார் இந்த மீனாட்சி சௌத்ரி? மேலும் படிக்க | கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.