TAMIL

OYO-வின் புதிய விதிகள் இந்த மாநிலத்தில் மட்டும் தான்! நிறுவனம் விளக்கம்!

பிரபல தங்கும் விடுதியான OYO அதன் செக்-இன் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இனி OYOல் ரூம் எடுத்து தங்கும் போது, குறிப்பாக ஆண் மற்றும் பெண் ஒரே அறையில் தங்கும் போது முறையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். திருமணமாகாத தம்பிகள் OYOல் தங்குவதை தடை செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் உள்ள OYOவின் பார்ட்னர் ஹோட்டல்களில் அமல்படுத்தப்பட உள்ளது. ஹோட்டல்களில் செக்-இன் செய்யும்போது தம்பதிகள் தங்கள் உறவுக்கான சரியான ஆதாரத்தை வழங்க வேண்டும். மேலும் படிக்க | முகேஷ் அம்பானிக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி வகைகள் இவை தான்..! மேலும் உள்ளூர் கலாச்சார உணர்வுகளுக்கு ஏற்ப முன்பதிவுகளை ஏற்க அல்லது நிராகரிக்க ஹோட்டல்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ஆன்லைன் அல்லது நேரடியாக சென்று என எந்த விதத்தில் முன்பதிவு செய்தாலும் அனைத்து தம்பதிகளும் செக்-இந்த செய்யும் போது தங்களது உறவிற்கான சரியான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆதாரங்களை தாண்டி அந்த குறிப்பிட்ட ஹோட்டல்கள் முன்பதிவை நிராகரிக்க அல்லது ஏற்றுக்கொள்ள OYO நிறுவனம் அதிகாரம் வழங்கி உள்ளது. இந்த புதிய கொள்கை OYOன் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இது விருந்தோம்பல், குடும்பங்கள், மாணவர்கள், வணிக வல்லுநர்கள் மற்றும் பிற மக்கள் உட்பட பல்வேறு வகையான பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட செக்-இன் விதிமுறைகள் முதலில் மீரட்டில் செயல்படுத்தப்படும். அந்த பகுதியில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் மற்ற நகரங்களுக்கும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள OYO திட்டம் வைத்துள்ளனர். புதிய வழிகாட்டுதல்களின்படி, முன்பதிவு செய்யும் அனைத்து ஜோடிகளும் ஆன்லைன் தளங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ செக்-இன் செய்யும் போது தங்கள் உறவு நிலையைச் சரிபார்க்கும் ஏற்கத்தக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து விருந்தினர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் வசதியான சூழ்நிலையை வளர்ப்பதற்காக, மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்வதை அதிகரிக்கும் விதமாக இந்த விதிகளை கொண்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முன்முயற்சியானது சந்தேகத்திற்குரிய நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்ப்பது மற்றும் OYO பிராண்டை முறையான அங்கீகாரம் இல்லாமல் தவறாக பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய விதிகள் குறித்து OYO வட இந்தியாவின் பிராந்தியத் தலைவர் பவாஸ் சர்மா கூறுகையில், "முன்பதிவுகளை மதிப்பிடுவதற்கும் முடிவுகளை எடுப்பதற்கும் கூட்டாளர் ஹோட்டல்களுக்கு OYO அதிகாரம் அளித்துள்ளது. இந்த உத்தரவின் உடனடி தாக்கம் மீரட்டில் உள்ள OYOன் பார்ட்னர் ஹோட்டல்களில் அமல்படுத்தப்படும். இது தொடர்பாக வரும் கருத்துக்களை நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, எதிர்காலத்தில் இந்த புதிய விதிகள் அனைத்து நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். திருமணமாகாத தம்பதிகள் செக்-இன் செய்வதில் உள்ள சிக்கலைத் தீர்க்க உதவுவதற்காக சிவில் சமூக அமைப்புகளிடம் கேட்டுள்ளோம். தனிமனித சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். இந்தக் கொள்கையையும் அதன் தாக்கத்தையும் மதிப்பாய்வு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.