Tamil Rasi Palan Today On January 4 2025 : அவரவர்களின் கிரகப்பலன்கள் படி, 12 ராசிக்காரர்களுக்கும் அவர்களின் நாள் அமையும். 2025ஆம் ஆண்டின் ஜனவரி 4ஆம் தேதியான இன்று, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பது குறித்தும், பிற பலன்களையும் இங்கு காணலாம். மேஷம்: கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்கவும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும். எதிர்பாராத சில பண உதவிகள் உண்டாகலாம். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள். அஸ்வினி : அன்யோன்யம் அதிகரிக்கும். பரணி : குழப்பங்கள் குறையும். கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும். ரிஷபம்: உத்தியோக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் நல்லுறவு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். மூத்த உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள். கிருத்திகை : ஏற்ற,இறக்கமான நாள். ரோகிணி : நெருக்கடிகள் குறையும். மிருகசீரிஷம் : அனுபவங்கள் ஏற்படும். மிதுனம்: நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக்கொள்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். உங்கள் மீதான நம்பிக்கைகள் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். சாந்தம் நிறைந்த நாள். மிருகசீரிஷம் : மேன்மை ஏற்படும். திருவாதிரை : சிந்தனை மேம்படும். புனர்பூசம் : நம்பிக்கைகள் அதிகரிக்கும். கடகம்: கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபார செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும். விவேகம் வேண்டிய நாள். புனர்பூசம் : வாதங்கள் நீங்கும். பூசம் : விரயங்கள் ஏற்படும். ஆயில்யம் : பிரச்சனை நீங்கும். சிம்மம்: மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கணவன், மனைவிக்கு இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இதனால் பண வரத்தும் அதிகரிக்கலாம். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். மகம் : ஆதாயம் ஏற்படும். பூரம் : இழுபறிகள் குறையும். உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும். கன்னி: தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வியாபார நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள். உத்திரம் : ஆதாயம் உண்டாகும். அஸ்தம் : நம்பிக்கை மேம்படும். சித்திரை : உதவிகள் கிடைக்கும். துலாம்: குழந்தைகள் வழியில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். கலை சார்ந்த பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான நிலைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள். சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள். சுவாதி : ஆதரவான நாள். விசாகம் : மாற்றமான நாள். விருச்சிகம்: மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். புது விதமான சிந்தனைகள் மனதில் உருவாகும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். தடைப்பட்ட தன வரவுகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள். விசாகம் : தெளிவுகள் பிறக்கும். அனுஷம் : சாதகமான நாள். கேட்டை : வரவுகள் கிடைக்கும். தனுசு: உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சமூகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள். மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும். பூராடம் : அனுசரித்துச் செல்லவும். உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகரம்: வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் அறிமுகங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள். உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். திருவோணம் : அனுசரித்துச் செல்லவும். அவிட்டம் : அறிமுகங்கள் ஏற்படும். கும்பம்: மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும். முயற்சி மேம்படும் நாள். அவிட்டம் : மேன்மை உண்டாகும். சதயம் : லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி : நிதானம் வேண்டும். மீனம்: உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். சலனம் நிறைந்த நாள். பூரட்டாதி : புரிதல்கள் மேம்படும். உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும். ரேவதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் Tamil News) உறுதிப்படுத்தவில்லை. மேலும் படிக்க | இந்த 3 ராசிகள் மீது கருனை காட்டும் சூரியன் மற்றும் புதன்! 21 நாட்கள் ஜாக்பார்ட் தான்! மேலும் படிக்க | பணம் மற்றும் வெற்றி இரண்டும் இருக்கக்கூடிய 5 ராசிக்காரர்கள் வாழ்க்கைக்கு என்றும் ஒளிமயமான எதிர்காலம். சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.