China Car Hit And Run Tragedy: சீனாவின் ஸூஹைய் (Zhuhai) நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து வந்த மக்கள் மீது 62 வயது முதியவர் காரை வைத்து மோதி உள்ளார். இதில் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 43 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸூஹைய் விளையாட்டு மைதானத்தில் மாலை பொழுதுகளில் மக்கள் நடைபயிற்சி செய்வது, உடற்பயிற்சிகளை செய்வது வாடிக்கையான ஒன்று. அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரம் ஆகும். அந்த வகையில், நேற்று (நவ. 11) அதாவது திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. ஸூஹைய் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள நகரமாகும். சுயநினைவின்றி மருத்துவமனையில் கொலையாளி 62 வயதான முதியவரே இந்த நாசக்கார செயலை செய்துள்ளார். அவருடைய துணைப் பெயரின் மூலம் அவர் Fan என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு சமீபத்தில் விவாகரத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு அதிருப்தி ஏற்படவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காருக்குள்ளேயே அந்த முதியவர் தனது கையையும் கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தி உள்ளார். இதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் படிக்க | எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் சுனிதா வில்லியம்ஸ்... வாய் திறக்குமா நாசா சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் அதிகாரிகள் அந்த விளையாட்டு மையத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்தை செய்த 62 வயது முதியவர் Fan தற்போது மருத்துவமனையில் சுயநினைவின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு கழுத்து பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரிடம் இன்னும் முழுமையான விசாரணை தொடங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #China : car runs into a crowd in the city of #Zhuhai . #Aftermath A 62-year-old driver crashed his car into a crowd of people near a local sports center, injuring more than 20 people and killing several of them pic.twitter.com/tvZ1hQLSMV — Ian Collins (@Ian_Collins_03) November 11, 2024 துரத்தி துரத்தி கொன்ற முதியவர்... முதற்கட்ட விசாரணையில், அந்த முதியவருக்கு இணையருடன் விவாகரத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, விவாகரத்தை தொடர்ந்து சொத்துக்களை பகிர்ந்தளிப்பதில் அவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விரக்தியின் உச்சத்தில், அவர் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து காரை வைத்து மோதி இந்த கொலைக்கார சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. பொது மக்களின் உயிருக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் போலீசாரால் அந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு விரைந்து தீவிர சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தியிருக்கிறார். குற்றவாளி சட்டப்படி கடுமையான தண்டனையை பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார் என சீன அரசின் சேனலான CCTV தெரிவித்துள்ளது. யுத்த களம் போல்... ஸூஹைய் நகரில் நவ. 12ஆம் தேதியில் இருந்து நவ. 17ஆம் தேதி வரை வான்வழி விமான சாகச நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. சாகச நிகழ்ச்சிக்கு ஒரு நாளுக்கு முன்பு இந்த கொடூர சம்பவம் நடந்தேறி உள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சீனாவே கதிகலங்கி போயுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் சம்பவ இடங்களில் மக்களால் எடுக்கப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அதில் சாலைகளில் கார் மோதியதால் சிதறிகிடக்கும் உடல்கள், காயத்தால் துடிக்கும் மக்கள், உடல்களின் முன்னால் கண்ணீருடன் கதறும் உறவினர்கள் என இதிகாசங்களில் கூறப்படும் யுத்த களம் போல் காட்சியளிக்கின்றன. 35 people were killed and another 43 injured when a driver rammed his car into people exercising at a sports center in the southern Chinese city of Zhuhai, police in China said. The 62-year-old driver has been detained. pic.twitter.com/pEKHWgva5k — T_CAS videos (@tecas2000) November 12, 2024 சம்பவ இடத்தில் வெவ்வேறு நடைப்பயிற்சி குழுக்கள் இருந்துள்ளன. அந்த குழுக்களின் மீது SUV வகை கார் ஒன்று வேகமாக சென்று அடுத்தடுத்து மோதியிருக்கிறது என செய்திகள் வெளியாகி உள்ளன. வெவ்வேறு இடங்களில் நின்று மக்களை துரத்தி துரத்தி, கொலைவெறியோடு அந்த கார் மோதியதாக சாட்சிகள் விவரித்ததை சர்வதேச ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. உயிரிழந்தவர்களில் மத்திய தர வயதினரும், முதியவர்களும் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கொடூர சம்பவத்தில் இருந்து சிறுவர்கள், பதின் வயதினர்களும் தப்பிக்கவில்லை. தற்போது அந்த விளையாட்டு மையம் காலவரையின்றி மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக மற்றும் அடர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் நடைபெறுவது குறைவுதாந். இருப்பினும் கடந்த சில காலமாக பள்ளிக் குழந்தைகள் உட்பட சந்தேகத்திற்கு இடமில்லாத பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் சீனா முழுவதும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் தொடரும் சம்பவங்கள் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தொடக்கப் பள்ளி அருகே நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாங்காய் நகரில் பல்பொருள் அங்காடியில் கத்தியால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டு, 15 பேர் காயமடைந்தனர். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட்டத்தின் மீது பேருந்து மோதியது, இதன் விளைவாக 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர், இருப்பினும் இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவங்களுக்கு மத்தியில் ஸூஹைய் நகரில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த சீனாவையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டு மக்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைந்து வர பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். மேலும் படிக்க | வயிறு பெருசானால் இந்த பிரச்னையும் இருக்கலாம்... தொப்பைனு நினைச்சு அசால்ட்டா இருக்காதீங்க! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?
- By Sarkai Info
- December 20, 2024
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Spotlight
Today’s Hot
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்
- By Sarkai Info
- December 20, 2024
ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
- By Sarkai Info
- December 20, 2024
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
- By Sarkai Info
- December 20, 2024
Featured News
Latest From This Week
நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் - பரபரப்பு பின்னணி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Budget 2025: அந்த குட் நியூஸ் வருகிறதா? EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்?
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
ஓப்பனரை வீட்டுக்கு அனுப்பிய ஆஸ்திரேலியா... உள்ளே வரும் மாஸ் வீரர் - இந்தியாவுக்கு பெரிய பிரச்னை
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.