TAMIL

யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!

Latest News Of Anna University Student Harassment Case : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தன்னை யாரோ ஒரு சாருடன் செல்ல கைதாகியுள்ள குணசேகரன் மிரட்டியதாக புகாரித்த நிலையில் அது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சார்? அப்படி ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? என விசாரணையில் இறங்கி இருக்கின்றனர் போலீசார்... இது குறித்தான செய்தி தொகுப்பை பார்க்கலாம் யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட இந்த வார்த்தை தான் தற்போது தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. ஞானசேகரன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரக்கூடிய சூழ்நிலையில் உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவும் தனது விசாரணையை துவக்கியுள்ளது. முதலாவதாக சம்பவம் நடந்த இடத்தையும் அங்கிருந்த சிசிடிவிக்களையும் நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி இருக்கிறது சிறப்பு விசாரணை குழு. அடுத்த கட்டமாக சிறப்பு விசாரணைக் குழு விடை தேட முயற்சித்திருப்பது யார் அந்த சார்? என்பதைத்தான். இந்த சார் குறித்த பின்னணியை ஞானசேகரன் செல்போனை ஆய்வு செய்தால் தெரிந்துவிடும் என காவல்துறை தரப்பில் நம்புகின்றனர். கொள்ளை வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு ஞானசேகரனை தேடி வந்ததாக சொல்லப்படும் நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் சென்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் ஞானசேகரன். கொள்ளையடிக்க போகும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை குணசேகரன் வீடியோவாக எடுத்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஞானசேகரன் பயன்படுத்தி வந்த செல்போனை, சைபர் ஆய்விற்காக அனுப்பி அந்த போனில் அழிக்கப்பட்ட வீடியோக்களையும், 6 மாதத்துக்கான கால் ஹிஸ்டரி மற்றும் whatsapp சாட்டிங் போன்றவற்றையும் ரெக்கவரி செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் ஞானசேகரன் வேறு யாருக்காவது ஆபாச வீடியோக்களை அனுப்பி இருக்கிறாரா? அல்லது எல்லாரும் முன் வைக்க கூடிய அந்த சார் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவரும் என்கின்றனர் போலீசார். மேலும் படிக்க | அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: துணை முதல்வர், அமைச்சருடன் குற்றவாளி!! மேலும் படிக்க | அண்ணா பல்கலை., வழக்கு: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.