TAMIL

குரு உச்ச பெயர்ச்சி.. அடுத்த மே 14 வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்

Jupiter Transit In Taurus: வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். இது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடும். அந்த வகையில் இந்து பஞ்சாங்கத்தின் படி மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வன், கல்வி, குழந்தை பாக்கியம் மற்றும் செழிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் கடந்த மே 1 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். பொதுவாக குரு பெயர்ச்சி ஒவ்வொரு வருடமும் நடைபெறும். அந்த வகையில் சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் பயணித்து வரும் குரு கிரகம் அடுத்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே, தற்போது இருக்கூடிய நாட்கள் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பான அருள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12 ஆம் இடத்தில், அதாவது மேஷ ராசியில் இருந்தார் குரு. இப்போது ஜென்ம இடத்தில் குருவாக மாறி உள்ளது. இந்த குரு உங்கள் வீட்டில் உள்ளது உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே சரியான முறையில் பட்ஜெட்டை திட்டமிடவும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம், அல்லது புதிய தொழிலை தொடங்கலாம். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். மேலும் படிக்க | புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்! சிம்மம் (Leo Zodiac Sign): உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பயணிக்கிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும். தொழிலில் வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெறலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் இதுவரை இருந்து பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக முடிவுக்கு வரும். நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு. வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். கன்னி (Virgo Zodiac Sign): 8 ஆம் இடத்தில் இருந்த குரு 9 ஆம் இடத்தில் பயணித்து வருகிறார். உங்கள் ராசியை குரு பார்த்துக் கொண்டு இருப்பதால் உங்களுக்கு பொருளாதாரம் உயரும். கன்னி ராசிக்காரர்களுக்கு இனி நன்மை உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வு பெறலாம். பல முக்கியமான பணிகளை முடிப்பீர்கள். சுபிட்சம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - News இதற்கு பொறுப்பேற்காது.) மேலும் படிக்க | கிருஷ்ணாஷ்டமி முதல் 7 நாட்களுக்கு உங்கள் விதி எப்படி இருக்கும்? 2024 ஆகஸ்ட் இறுதி வார ராசிபலன்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.