TAMIL

இந்தியாவில் டெலிகிராம் பயன்படுத்த தடை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற மோசமான செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் வெளியாகும் தகவலை பொறுத்து இந்தியாவில் டெலிகிராம் ஆப் பயன்பாட்டை தடை கூட செய்யலாம். மத்திய அரசின் உள்துறை மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒரு பகுதியாக உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் என்ற சிறப்புக் குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பாரிஸில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் இந்த விசாரணை தொடங்கியது. எலோன் மஸ்க் மற்றும் எட்வர்ட் ஸ்னோடென் போன்ற சில பிரபலங்கள் இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ... 2ஜிபி டேட்டா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் இந்தியாவில் டெலிகிராம் தடை செய்யப்படுமா? தற்போது வரை இது குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை, தீவிர விசாரணைக்கு பிறகே இறுதி முடிவுகள் எடுக்கப்படும். டெலிகிராம் இந்திய அரசின் விதிகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் அரசிடம் முறையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். யார் இந்த பாவெல் துரோவ்? 39 வயதான பாவெல் துரோவ் ரஷ்யாவில் VKontakte என்ற மிகவும் பிரபலமான சமூக ஊடக தளத்தை 2007ல் தொடங்க உதவினார். இவர் பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடன் ஒப்பிடப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் ரஷ்ய அரசாங்கம் உக்ரைனில் அதிக சுதந்திரத்தை விரும்பும் மக்களைப் பற்றிய தகவல்களைத் தர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக துரோவ் கூறினார். மக்கள் ஆன்லைனில் என்ன செய்ய முடியும் என்பதில் அரசாங்கம் கடுமையாக இருந்ததால், துரோவ் VKontakte என்ற சமூக ஊடக தளத்தின் தனது பங்குகளை விற்றுவிட்டு ரஷ்யாவை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, அவர் தனது 28 வயதில் தனது சகோதரர் நிகோலாயுடன் இணைந்து டெலிகிராம் என்ற புதிய செயலியை உருவாக்கினார். துபாயில் வசிக்கும் துரோவ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் குடிமகனாக இருக்கிறார். அவர் தனது ரஷ்ய குடியுரிமையை விட்டுக்கொடுத்தாரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, இவரின் சொத்து மதிப்பு சுமார் $15.5 பில்லியன் என்று கூறப்படுகிறது. டெலிகிராம் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட, நம்பகமான ஆப்பாக இருக்க வேண்டும் என்று துரோவ் விரும்புகிறார். ஆனால் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் இது மோசமான செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும் என்றும், தீவிரவாத செயல்கள், பிளாக் மார்க்கெட் இதன் மூலம் வளரும் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். டெலிகிராம் செயலியில் நடக்கும் மோசமான செயல்களை கண்காணிக்க தவறியதாக துரோவ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களை ஏமாற்றுதல், போதைப்பொருள் விற்பனை செய்தல், ஆன்லைனில் மற்றவர்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் கடுமையான குற்றங்களுக்கு உதவுதல் ஆகிய குற்றங்கள் டெலிகிராம் மூலம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள் விதிகளை பின்பற்றாத சமூக ஊடக கணக்கு நிறுவனத்திற்கு அபராதமும் விதித்துள்ளன. அவர்கள் இந்த நிறுவனங்களின் தலைவர்களை கேள்வி கேட்டுள்ளனர் தவிர, உண்மையில் கைது செய்யவில்லை. 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் ஒரு உயர் பதவியில் இருந்த ஃபேஸ்புக் ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்தது, ஏனெனில் போதைப்பொருள் பற்றிய விசாரணைக்கு தேவையான தகவல்களை பேஸ்புக் கொடுக்கவில்லை என்று கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அன்று நள்ளிரவு நடந்தது என்ன? விசாரணையில் அந்த 4 டாக்டர்கள்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.