TAMIL

40 வயதிற்குள் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள்!

Important Life Lessons To Learn Before 40 : வயது ஏற ஏற, நமக்குள் வாழ்க்கை அதற்குள் முடிந்து விட போகிறதோ என்ற பயம் இருக்கும். அதே சமயத்தில் நம் வயதுக்கு ஏற்ற பொறுப்பும் வந்து விட்டது போல தோன்றும். ஆனால், ஒரு சிலருக்கு 40 வயது ஆனாலும் அதற்கான தெளிவோ அல்லது புரிதலோ இல்லாமல் இருப்பர். எனவே, 40 வயது ஆவதற்கு முன்னர் சில விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? அனைத்திலும் குறை இருக்கிறது: அனைவராலும் எல்லா நேரத்திலும் குறையின்றி இருக்க முடியாது. ஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரி, புத்திசாலி தனத்துடன் இருந்தாலும் சரி, கடின உழைப்பாளியாக இருந்தாலும் சரி எப்படி இருந்தாலும் அவர்களுக்குள் ஏதேனும் ஒரு குறை இருக்கும். இதை புரிந்து கொண்டால் உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை கூடி, உங்கள் மீது இருக்கும் அன்பும் அதிகரிக்கும். நேரத்தின் மதிப்பு: உங்கள் நாட்கள், நேரத்தை வைத்துதான் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், உங்கள் வாழ்வில் எது உங்களுக்கு முதன்மையானதாக தோன்றுகிறதோ, அதற்காக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்தலாம். இதனால், உங்களுக்கு வாழ்க்கையில் அர்த்தம் புரிந்து, முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும். தோல்வியை தாங்கும் திறன்: தோல்விகள், இழப்பின் அடையாளமாக இருக்காது. ஆனால், தோல்வியடையும் போது அது பேரிழப்பாக தோன்றலாம். நமக்கு, தோல்வியை தாங்கிக்கொள்ளும் திறன் குறைவாகவே இருக்கும். தடைகளும் தோல்விகளும் வாழ்வில் வெற்றிகளை போல வரும் போகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒரு விஷயத்தில் தோல்வி அடைகிறோம் என்றால் அந்த விஷயத்தில் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். எனவே, தாேல்வியை குறித்த புரிதலை நாம் மனதில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். மேலும் படிக்க | இரண்டாவது குழந்தை பெற்று கொள்வதால் ஏற்படும் நன்மைகள்! நிகழ்காலத்தில் இருப்பது: நம்மில் பலர், நம் வாழ்வில் முன்னர் நடந்த விஷயங்களை நினைத்து அல்லது இன்னும் நடக்காத விஷயங்களை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருப்போம். முன்னர் நடந்த விஷயங்களை நினைத்த பயம் இருப்பதும், இனி நடக்கப்போகும் விஷயங்களை நினைத்து கவலை இருந்தாலும் அதை பற்றி அதிகமாக யோசிக்க கூடாது. இன்றைய நாள் எப்படி இருக்கிறதோ அதே போல நீங்களும் இருந்துவிட்டு சென்று விட வேண்டும். தனிப்பட்ட எல்லைகள்: உங்கள் நலனுக்காக, நீங்கள் பிறரிடமும், பிறர் உங்களிடமும் எல்லையை தாண்டாமல் இருக்க வேண்டும். அனைவரிடமும் எல்லையோடு வைத்துக்கொள்வது உங்களுக்கு பெரிய நன்மையை தரும் என்பது வயதான பின்புதான் புரிய வரும். எனவே, அலுவலகம் முதல், நண்பர்கள் உடனான சந்திப்பு வரை எல்லா இடங்களிலும் அனைவரிடமும் எதை கூற வேண்டுமோ அதை மட்டும் கூறுங்கள். அளவுக்கு மீறி எதையும் பேசாதீர்கள். அவர்களின் எல்லையையும் தாண்டாதீர்கள், உங்கள் எல்லையையும் தாண்ட விடாதீர்கள். ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்: பலர், வயதான பின்புதான் தங்கள் உடலில் அக்கறை செலுத்தி இருக்கலாமே என யோசிக்கின்றனர். எனவே, தினமும் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதையும் உடல் ஏற்றுக்கொள்ளும் ஹெல்தியான உணவுகளை சாப்பிடுவதையும் முதன்மை படுத்த வேண்டும். மேலும் படிக்க | உங்கள் நண்பர்களுக்கு தரவே கூடாத பரிசுகள்! பின்னாடி பிரிய வாய்ப்பிருக்கு.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.