TAMIL

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: பூஜை நேரம், முகூர்த்தம், முழு விவரம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 2024: கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்பது இந்து சமூகத்தில் மிகவும் புனிதமான மற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படுகிறது. மேலும் இது கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். இந்த நாளில் பக்தர்கள் ஒரு நாள் விரதம் அனுசரித்து, இந்த திருவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, பாத்ரபத மாதத்தின் தேய் பிறை (கிருஷ்ண பக்ஷ) அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தின் நம்பிக்கைகளின்படி, கிருஷ்ணர் இந்த நாளில் பிறந்தார் என நம்பப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதியில் பிறந்தார். கிருஷ்ணரின் பிறந்தநாளான இந்த நாளில், மதுரா பிருந்தாவனத்தில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி நாளை உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (Krishna Janmashtami 2024) அன்று பூஜை செய்யும் நேரம்: முகூர்த்தம் மற்றும் யோகம் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுவதாக காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம், மகா பொற்காலம் இந்த ராசிகளுக்கு காலை 09.13 மணிக்கு தான் அஷ்டமி திதி பிறக்கிறது. ரோகிணி நட்சத்திரம் அன்று இரவு 09.40 மணிக்கு பிறகு தான் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி தான் சூரிய உதய சமயத்தில் அஷ்டமி உள்ளது. இருந்தாலும் காலை 07.30 மணி வரை தான் அஷ்டமி திதி உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று, ஸ்ரீ கிருஷ்ணரை அலங்கரித்து, அவருக்கு அஷ்டகந்தா சந்தனம், அக்ஷதம் உட்பட பொருட்களை பூசி, பட்டு ஆடை அணிவித்து, அவர் கையில் புல்லாங்குழலுடன் காட்சி இருக்கும்படி அழகாக அலங்கரிப்பார்கள். அதன்பிறகு, பால், நெய், வெண்ணெய் மிஷ்ரி மற்றும் பிற பொருட்களை படைப்பார்கள். பூக்கள் தூவி மனதார வணங்குவார்கள். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியின் முக்கியத்துவம்: கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபடுவது கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். அதாவது, குழந்தை இல்லாதவர்கள் அல்லது திட்டமிடுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கிருஷ்ணரை வழிபடலாம். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நைவேத்தியம்: கிருஷ்ணரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும், அவருக்கு வெண்ணெய்தான் பிடித்தமான நைவேத்தியம் என்று. அதோடு அப்பம், முறுக்கு, நாவல் பழம் ஆகியவையும் படைக்கலாம். மேலும் படிக்க | சனி பெயர்ச்சி ஆரம்பம்.. அடுத்த 45 நாட்கள் மகா ராஜ அதிர்ஷ்டம், பணம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.