TAMIL

நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது - நடிகை ரோகிணி

நீட் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,நீட்டை விளக்குங்கள் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பேசி வருவதாக ஆக்கூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பொன்விழா ஆண்டு கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆக்கூர் கிளை சார்பில் பொன்விழா ஆண்டு கலை இலக்கிய இரவு நிகழ்ச்சி நடைபெற்றது .. சங்கத்தின் கிளை தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்குதங்கத்தின் எழுத்தாளர் கலைஞர்கள் மாநில துணைத் தலைவரும் நடிகையுமான ரோகினி கலந்து கொண்டு ஆக்கூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவிகள் மற்றும் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். மேலும் படிக்க | 50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்.. அப்போது அவர் பேசுகையில், “கல்வி எல்லோருக்குமான கல்வியாக இல்லை கோச்சிங் சென்டர் அனுப்ப முடிந்த குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவம் என்ற இடத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது நீட் என்னும் விஷயத்தை நாம் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்கக்கூடாது என முதல் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” என்றார். தாெடர்ந்து, “தமிழக முதல்வரும் நீட்டை விளக்குங்கள் என தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் நீட் ஏன் விளக்கப்பட வேண்டும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய குழந்தைகள் கோச்சிங் சென்டருக்கு போக முடியவில்லை என்றால் கோச்சிங் சென்டருக்கு போன குழந்தைகளுடன் ஒரு ஓட்டப்பந்தயத்தில் காலில் எந்த ஷூவும் போடாமல் ஓடுவது போல் அதுவும் காலில் கணத்தை கட்டிக்கொண்டு ஓடுவது போல் இது எந்த விதத்தில் நியாயமானது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “எல்லா குழந்தைகளுக்கும் எப்படியான வாய்ப்புகள் இருக்கிறதோ அனைவருக்கும் அதன்படி தான் இருக்க வேண்டும் அப்படி இருந்திருந்தது என்றால் தமிழகத்தில் தற்போது எத்தனையோ மருத்துவர்கள் எத்தனையோ ஐஏஎஸ் ஆபிஸர்கள் பின் தங்கிய சமூகத்திலிருந்து இப்போது இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது அவர்களுக்கான வழிமுறை எப்படி கிடைத்தது என்றால் சமூக நீதி இருந்ததனால் தான் அந்த சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என நாம் அனைவரும் பாடுபட வேண்டும்” என கூறினார். மேலும் நிகழ்ச்சிகள் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் எழுத்தாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க | இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.