TAMIL

கட்சி தொண்டர்களுக்கு விஜய் சொன்ன முக்கிய அட்வைஸ் இதுதான் - புஸ்சி ஆனந்த்!

சென்னை பெருங்குடி திருவள்ளூர் நகர் பகுதியில் தவெக சார்பில் 50 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். 184வது தவெக வட்ட செயலாளர் கெளதம்ராஜ் மற்றும் பிரதீப்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தவெக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி.ஆனந்த் கலந்து கொண்டார். தவெக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு மேளதாளம் முழங்க, மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பை அளித்தனர். பின்னர் 50 அடி உயர கட்சி கொடி கம்பத்தில் தவெக கட்சியின் கொடியை மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஏற்றினார். மேலும் படிக்க | கிருஷ்ணகிரி : பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் தற்கொலை அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு நோட்டு, வாட்டர் பாட்டில், பென்சில், பேனா, பை உள்ளிட்டவைகளையும், பெண்களுக்கு புடவை, குடம், டப் ஆகியவற்றை வழங்கி, ஆண்களுக்கு லுங்கி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய தவெக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அறிவுறுத்தலின் படி, ஆசீர்வாதத்துடன் தொடர்ந்து கொடியேற்று நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், அடுத்து தொழிலை பார்க்க வேண்டும், அதில் வரும் வருமானத்தில் 1 அல்லது 2 % சதவீதத்தில் எடுத்து முடிந்த அளவுக்கு மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்றும், எக்காரணத்திற்காகவும் கடன் வாங்கி செலவு செய்யகூடாது என்று எங்கள் தவெக தலைவர் தெரிவித்து உள்ளார். தவெக கட்சியின் தலைவர் மீது பாசத்தின் காரணமாகவும், அன்பின் காரணமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்கின்ற கட்சி தவெக என்றும், இங்கே செலவு செய்யக்கூடிய பணம் அனைத்தும் இவர்களுடைய பணம் என்றும், நானும் மற்றவர்களும் தரவில்லை என்றும் பேசினார். மழை காலத்திலும், அதேபோல் அனைத்து நாட்களிலும், அனைத்து இடத்திலும் நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற கட்சி தவெக என்றும் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை அன்று தவேக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எங்கள் தலைவர் கட்சியின் கொடியை ஏற்றி அறிமுகம் செய்து வந்தார். அதன் பின்னர் முதல் முறையாக நான் தவெக கட்சிக் கொடியை என்னுடைய கையால் இங்கே ஏற்றி உள்ளேன். தவெக கட்சியின் தலைவர் விஜய் எங்களுக்கு அறிவுறுத்தியது அனுமதி பெற்ற பின்னரே கொடியேற்ற வேண்டும், அனுமதி பெறாமல் கொடியேற்ற வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளார். தவெக கட்சியின் தலைவர் அறிவுறுத்தலின் படி இன்று பல்வேறு மாவட்டங்களில் தவெகவினர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். எங்கள் தொண்டர்கள் மற்றும் தோழர்களின் வீட்டில் தவெக கட்சியின் வெற்றிக் கொடி பறக்கும் என்றும், என்னுடைய காரில் இன்று தான் கட்சி கொடியை மாற்றினேன், எனக்கு முன்னரே எங்கள் தொண்டர்கள் காரில் தவெக கட்சி கொடி பறந்து கொண்டிருக்கிறது. நான் சாலையில் காரில் செல்லும் போது 15 காரில் ஒரு காரிலாவது எங்க கட்சி கொடி பறக்கிறது என்று சொன்னால் அது தான் எங்களுடைய வெற்றி என்றும், ஒரு தொண்டனை அழுகு பார்த்து அவனுக்கு என்ன தேவை என்று அறிந்து செய்பவர் தவெக தலைவர். இந்த நிகழ்ச்சியில் அதிக மகளிர் கலந்து கொண்டு உள்ளீர்கள், நாங்கள் அழைத்ததும் வந்ததற்கு உங்களுக்கு வாழ்த்துகளையும்,நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். எதை செய்தாலும் கேட்டு ஓட்டு வாங்கலாம் என்று செய்யவில்லை, நாங்கள் கடந்த 27, 28 வருடமாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த இயக்கம் தற்போது கட்சியாக செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 3000 முதல் 4000 பேருக்கு தளபதி விலையில்லா விருந்தகம் என்னும் பெயரில் காலை உணவு வழங்கி வருகிறோம் என்றும், தளபதி விலையில்லா ரொட்டி, முட்டை, பால் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தினந்தோறும் வழங்கி வருகிறோம். இரவு நேரத்தில் தளபதி பயிலகம் என்னும் இரவு பாடசாலையை அனைத்து மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் தளபதி குறுதியகம் சார்பில் 50 முதல் 65 பேருக்கு இரத்தம் வழங்கி வருகிறோம். தளபதி நூலகம், சட்ட ஆலோசனை மையம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் படிக்க | Why Actor Vijay Likes Vijayakanth So Much? நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.