TAMIL

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரபல யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார் பிஜிலி ரமேஷ். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்தது. தொடர்ந்து நிறைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். சிவப்பு மஞ்சள் பச்சை, ஆடை, காத்து வாக்குல ரெண்டு காதல், நட்பே துணை, பொன்மகள் வந்தாள், கோமாளி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் நல்ல வருமானமும் பெற்று வந்தார். இவரை வைத்து பல யூடியூப் சேனல்கள் நேர்காணலும் எடுத்து வந்தனர். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வருவது கம்மியானது. மேலும் படிக்க | Yuvan Shankar Raja: என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும் - யுவன் சங்கர் ராஜா! சினிமாவில் பிரபலமானவர்களை அந்த சமயத்தில் பயன்படுத்தி கொள்வார்கள், அதன் பிறகு மறந்து விடுவார்கள். இதே போன்ற நிலை பிஜிலி ரமேஷுக்கும் ஏற்பட்டது. தன்னை தீவிர ரஜினி ரசிகராக முன்னிறுத்தி கொள்ளும் இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்தது. பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் குடியை நிறுத்தததால் அதிக உடல்நல கோளாறு ஏற்பட்டதுள்ளது. சமீபத்தில் நடக்க முடியாத அளவிற்கு படுத்த படுக்கையாக சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து இருந்தார் பிஜிலி ரமேஷ். அதில் தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று தெரிவித்து இருந்தார். இவருக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் இருந்தது. குடித்துவிட்டு உடல்நலத்தை கெடுத்து கொண்ட இவருக்கு ஏன் அனைவரும் உதவ வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவருக்கு ஒருசிலர் பண உதவியும் அளித்து இருந்தனர். ஆனாலும் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார் பிஜிலி ரமேஷ். அவருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க | Movies releasing in September: செப்டம்பரில் வெளியாகவிருக்கும் மாஸ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.