TAMIL

5 கதவு மஹிந்திரா ராக்ஸ் ராக்கிங்! பல சிறப்பம்சங்கள் கொண்ட கார் இந்தியாவில் அறிமுகமானது!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று மஹிந்திரா & மஹிந்திரா 5 கதவு தார் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 5-கதவு எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் மஹிந்திரா தார் ராக்ஸ். இந்த புது வரவின் விலை, அம்சங்கள், வண்ணத் தெரிவுகள் என அனைத்தையும் தெரிந்துக் கொள்வோம். தார் ராக்ஸ் சிறப்பம்சங்கள் புதிய தார் ராக்ஸ், தார் தொடருக்கான முதல் பனோரமிக் சன்ரூஃப் கார் என்று சொல்லலாம். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவில் 5-கதவு தார் மாடல் காரை மஹிந்திரா & மஹிந்திரா ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது. புதிய தார் காரின் மேனுவல் பெட்ரோல் பேஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதுவே, மேனுவல் டீசல் பேஸ் மாடல் ரூ.13.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. கார் அறிமுக விழாவில் நடிகர் ஜான் ஆபிரகாம் கலந்து கொண்டார். Thar Roxx காருக்கான முன்பதிவுகள் அக்டோபர் 3 முதல் தொடங்கும் என்றால், காரின் டெலிவரி நவராத்திரி தசராவன்று தொடங்கும். செப்டம்பர் 14 முதல், ஷோரூம்களில் டெஸ்ட் டிரைவ் செய்யலாம் என்று ஆட்டோமொபைல் நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா தெரிவித்துள்ளது. மேலும் படிக்க | சம்பளத்தை சேமிக்கவே முடியவில்லையா? மாதாமாதம் கணிசமாக சேவிங்ஸ் செய்ய டிப்ஸ் இதோ! Thar ROXX SUV கார் அனைவராலும் விரும்பப்படும் என்றும், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் தார் பிராண்டை நம்பர் 1 SUVயாக மாற்றும் நோக்கில் நிறுவனம் செயல்படுவதாக தெரிகிறது. 3-கதவு பதிப்போடு ஒப்பிடும்போது 5-கதவு தார் காரில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ள தார் ராக்ஸ் எஸ்யூவியில் 644 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. பழைய தாரில் இருந்த குறைகளான இடம் மற்றும் வசதி பற்றிய கவலைகள் இந்த புதிய பதிப்பில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. தார் ரோக்ஸ் ADAS லெவல் 2 பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இந்தக் காரில் மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக 9 உயர் செயல்திறன் ஸ்பீக்கர்களை உள்ளடக்கியது. தார் ராக்ஸ் காரில், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், காற்றோட்டமான இருக்கைகள், ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா காட்சி மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு ஆகியவை இருக்கின்றன என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் படிக்க | மழையில் வெள்ளத்தில் உங்கள் கார் சிக்கினால் இன்சூரன்ஸ் பெற முடியுமா? புதிய தார் ஒரு சன்ரூஃப், மென்மையான-தொடு பொருட்கள் மற்றும் ADAS நிலை 2 பாதுகாப்பு மேம்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ADRENOX Connect பயன்பாட்டின் மூலம், பயனர்கள் 80 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களை அணுகலாம். தார் தொடரின் முதல் பனோரமிக் சன்ரூஃப் கவர்ச்சியாக இருக்கிறது. இந்த அருமையான அம்சத்தைக் காண்பிக்கும் படங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்தும் அனுபவமாக இது இருக்கும். ஸ்டீல்த் பிளாக், டேங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், பர்ன்ட் சியன்னா, பேட்டில்ஷிப் கிரே, நெபுலா ப்ளூ, டீப் ஃபாரஸ்ட் என ஏழு வண்ணங்களில் 5-கதவு SUV அறிமுகமானது. டிஜிட்டல் டிஸ்ப்ளே 5-கதவு தார் கார் ஒரு புதிய டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இது டிரைவர்களுக்கு முக்கியமான தகவல்களை அணுகுவதை எளிதாக்குகிறது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழிசெலுத்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. மென்மையான லெதர் டேஷ்போர்டு கேபினின் அழகை மேம்படுத்துகிறது. ஒலி தரத்திற்கு பெயர் பெற்ற ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், காரில் பயணிக்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள் மேலும் வசதியை சேர்க்கின்றன, இந்த அம்சம் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் வாகனங்களில் மட்டுமே கிடைக்கும். மேலும் படிக்க | RBI அட்டகாச அப்டேட்: இனி வங்கிக்கணக்கு இல்லையென்றாலும் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.. புதிய முறை அறிமுகம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.