TAMIL

CSK: ஏலத்தில் என்ட்ரி ஆகும் ஸ்டார் வீரர்...? கொக்கிப்போட்டு தூக்க காத்திருக்கும் சிஎஸ்கே!

IPL Mega Auction 2025 Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் (IPL 2025) மற்றும் அதற்கு முன் நடைபெறும் மெகா ஏலம் (IPL Mega Auction) ஆகியவை குறித்த பேச்சுகள் இப்போது இருந்த வர தொடங்கிவிட்டன. 10 அணிகளும் ஐபிஎல் மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அதே வேளையில், ஏலத்தில் வீரர்களை எடுக்கும் நடைமுறைகள், விதிமுறைகள் குறித்த ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் அறிவிப்புக்கும் காத்திருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களின் எதிர்பார்ப்பை கடந்த ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐயிடமும், ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவிடமும் முன்வைத்திருக்கின்றன. கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் RTM ஆப்ஷனுடன் 6-8 வீரர்களை தக்கவைக்க விதிமுறை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. சில அணிகளோ RTM சேர்க்காமலே 8 வீரர்களை தக்கவைக்க விதிமுறை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தன. அதுமட்டுமின்றி, ஐபிஎல் மெகா ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இல்லாமல், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் வந்தன. ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் சரியான காரணங்கள் இன்றி விலகும் வெளிநாட்டு வீரர்கள், மினி ஏலத்தை மட்டும் குறிவைத்து களமிறங்கும் வெளிநாட்டு வீரர்களை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன. மெகா ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருப்பினும், இவற்றில் எதை எதை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும் இன்னும் என்பது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தெரிந்துவிடும். பிசிசிஐ தற்போது துலிப் டிராபி தொடர் மீது முழு கவனத்தையும் செலுத்தியிருக்கும் நிலையில், மறுபக்கம் ஐபிஎல் மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெறும். ஐபிஎல் மெகா ஏலம் எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்ற அறிவிப்பும் செப்டம்பர் இறுதிக்குள் அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த முறை மெகா ஏலத்தில் பல புதிய வீரர்களும் இணைவார்கள் என கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பையில் பல்வேறு அணிகளில் ஜொலித்த வீரர்கள் இந்த முறை மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்துகொள்வார்கள். மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... தலைகீழாக மாறும் இந்த 3 அணிகள்... தூக்கியெறியப்படும் வீரர்கள்! மேலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் டி20 தொடர்களில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. அதேபோல், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று முடிந்த அமெரிக்க MLC டி20 லீக் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்றது மட்டுமின்றி ஸ்டீவ் ஸ்மித் 336 ரன்களை குவித்து, அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்டர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக 2021ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நிலையில், அடுத்த மூன்று சீசன்களில் அவர் விளையாடவில்லை. ஏலத்தில் இருந்தாலும் அவரை எந்த அணியும் எடுக்க விருப்பம் காட்டாமல் இருந்தன. இந்நிலையில், MLC அளித்த நம்பிக்கையை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் களமிறங்க ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டிருப்பதாகவும், மெகா ஏலத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கேவில் ஸ்டீவ் ஸ்மித்? அந்த வகையில் ஸ்டீவ் ஸ்மித் ஒருவேளை ஐபிஎல் மெகா ஏலத்தில் வந்தால் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி துணிந்து தேர்வு செய்யும் எனலாம். சிஎஸ்கேவுக்கும் ஆஸ்திரேலிய ஓப்பனிங் பேட்டர்களுமான கூட்டணி என்பது எப்போதுமே சக்சஸ்தான். மேத்யூ ஹேடன், மைக்கெல் ஹஸி, ஷேன் வாட்சன் என பலரும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக விளையாடியிருக்கின்றனர். இதில் ஹஸி, வாட்சன் ஆகியோர் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள். STEVE SMITH CONFIRMS HE WILL BE PUTTING HIS NAME IN THE IPL AUCTION...!!!! [Code Sports] pic.twitter.com/8Fz9mM2Sib — Johns. (@CricCrazyJohns) August 14, 2024 எனவே, ஸ்டீவ் ஸ்மித் குறைந்த விலையில் கிடைக்கும்பட்சத்தில் சிஎஸ்கே அவரை ஓப்பனிங்கில் களமிறக்கும். கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் ஒருவரை தக்கவைத்தாலும் ஸ்மித்தை பேக்அப்பாக கூட பயன்படுத்திக்கொள்ளலாம். புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் தோனி விளையாடியபோது ஸ்மித்தும் அவருடன் விளையாடியிருந்தார். 2017இல் ஸ்மித் கேப்டன்ஸியின்கீழ் தோனி விளையாடியிருந்தார். மீண்டும் அந்த காம்பினேஷன் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரும் ஸ்டீவ் ஸ்மித்தும் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 2485 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 101 ரன்களையும் அடித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் எடுக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அதன்பின் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு சென்றார். இருப்பினும் 2012ஆம் ஆண்டில்தான் அவர் முதல் ஐபிஎல் போட்டியை புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக விளையாடினார். அதன் பின் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ரைஸ்ஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும் ஸ்மித் விளையாடி உள்ளார். மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.