TAMIL

தமிழ்நாடு அரசின் இலவச டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி..! தொழில் முனைவோருக்கு சூப்பர் சான்ஸ்

Tamil Nadu government free business training | தமிழ்நாடு அரசு இளம் தலைமுறையினர், சொந்த தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு தேவையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயற்சியை கொடுக்கிறது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் அரசு கொடுக்கும் இந்த சூப்பர் சான்ஸ் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய மார்க்கெட்டிங் உலகில் பணம் செலுத்தி மார்க்கெட்டிங் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கொடுக்கும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் இலவசமாகவே நீங்கள் உங்கள் தொழிலை வளர்க்கக்கூடிய நுட்பங்களையும், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம். அதனால் தமிழ்நாடு அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் முழுமையான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவணம் மூன்று நாட்கள் மின்னணு வர்த்தகம் இ-காமர்ஸ் குறித்த பயிற்சி வழங்குகிறது. சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN) "மின்னணு வர்த்தகம்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி நிரலினை 21.01.2025 முதல் 23.01.2025 வரை EDII வசாகத்தில் நடத்த உள்ளது. மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்படும் 4 சிறப்பு ரயில்கள்! எந்தெந்த மாவட்டங்களுக்கு? பாடக்குறிப்புகள்: 1. மின்னணு வர்த்தகம் அறிமுகம் * மின்னணு வர்த்தகம் என்றால் என்ன? * மின்னணு வர்த்தகம் மாதிரி வகைகள் • நன்மைகள் மற்றும் சவால்கள் 2. உங்கள் இணையவழி வர்த்தகத்தை அமைத்தல் * மின்வணிக தளத்தைத் தேர்ந்தெடுக்குதல் * டொமைன் மற்றும் ஹோஸ்டிங் * உங்கள் கடையை வடிவமைத்தல் * பணம் செலுத்தும் வாயில்களை அமைத்தல் 3. தயாரிப்பு மேலாண்மை மற்றும் சரக்கு கையாளுதல் * தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தேர்வு * தயாரிப்பு பட்டியல் • சரக்கு மேலாண்மை 4. மின்வணிகத்திற்கு சந்தைப்படுத்துதல் * தேடல் இயந்திர மேம்பாடு (SEO) * சமூக ஊடக விளம்பரம் * மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல் * செலுத்தும்-ஒரு-கிளிக் விளம்பரங்கள் (PPC) 5. செயல்பாடுகள் மற்றும் தளவாட மேலாண்மை • ஒழுங்கு மேலாண்மை * பொருட்களை அனுப்புதல் மற்றும் விநியோகம் * மின் வணிகத்திற்கான நிதி மேலாண்மை 6. மின்வணிக நிதி மேலாண்மை * பட்ஜெட் மற்றும் முன்னறிவிப்பு * விலை நிர்ணய உத்திகள் * செயல்திறன் அளவுகோல்கள் 7. வளர்ச்சி மற்றும் விரிவாக்கமும் * தயாரிப்பு வரிசையை விரிவாக்குதல் * புதிய சந்தைகளில் நுழைதல் மேலும் தகவலுக்கு, எங்கள் இணையதளமான www.edtn.in ஐ பார்க்கவும். மேலும் தகவலுக்கு, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணிமுதல் மாலை 05.45 மணிவரை கீழ்க்காணும் தொலைபேசி / மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும் முன்பதிவு அவசியம்: www.editn.in / 90806 09808 / 9841693060/ 96771 52265. மேலும் படிக்க | ரேஷன் கார்டு அரிசி அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்..! விரும்பினால் இலவசமாக கோதுமை வாங்கலாம் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.