TAMIL

ஷாக்கடிக்கும் மின் கட்டணத்தை 20-40% குறைக்க சுலபமான வழி! இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

மோஷன் சென்சார் விளக்குகள் : தற்போது மின் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் முக்கியக் கவலைகளில் ஒன்றாக மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. மின் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்க நீங்கள் விரும்பினால், உங்கள் மின் கட்டணத்தை 20-40 சதவீதம் குறைக்கலாம். இதற்காக நீங்கள் அதிகம் செய்ய வேண்டியதில்லை, வீட்டின் விளக்குகளை மாற்றினால் போதும். எங்கெல்லாம் விளக்குகளை மாற்ற வேண்டும்? தெரிந்துக் கொள்ளுங்கள்... முகப்பு விளக்கு : வீட்டில் வெளிச்சம் கொடுக்கும் விளக்குகள், டிவி, குளிர்சாதன பெட்டி, குளிர்விப்பான், ஏசி, மைக்ரோவேவ் போன்ற பல மின்சாதனங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகமாகிறது. இவற்றைத் தவிர, பலர் தங்கள் வீடுகளில் வெளிச்சம் தருவதற்காக பயன்படுத்தும் பல்புகள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. எனவே, சாதாரணமான பல்புகளுக்குப் பதிலாக மோஷன் சென்சார் விளக்குகளை வீட்டில் பயன்படுத்தலாம். வீட்டில் சாதாரண எல்இடி விளக்குகளை நிறுவுகிறார்கள், இது மின்சாரத்தை சேமிக்கிறது. ஆனால், மோஷன் சென்சார் விளக்குகள், எல்இடி பல்புகளைவிட மின்சாரத்தை அதிகம் சேமிக்கிறது. இதனால் மின்சார கட்டணத்தில் 20-40% வரை சேமிக்கலாம். மேலும் படிக்க | சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா? மோஷன் சென்சார் விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? தானியங்கி ஆன்/ஆஃப்: ஒரு நபர் தனது வரம்பிற்குள் வரும்போது மட்டுமே இந்த விளக்குகள் இயங்கும். அதாவது, இந்த விளக்குகளை யாரும் இயக்கவோ அணைக்கவோ தேவையில்லை. முகப்பு விளக்கு தெருவிளக்கு என எப்போதும் எரியும் விளக்குகள் அதிக மின்சாரத்தை செலவளிக்கும். ஒருவர் அருகில் வரும்போது மட்டும் எரியும் மோஷன் சென்சார் விளக்குகள், மின்சார செலவைக் கட்டுப்படுத்தும். மின்சார சேமிப்பு: மோஷன் சென்சார் விளக்குகள் தேவைப்படும் போது மட்டுமே இயக்கப்படும், மின் நுகர்வு கணிசமாகக் குறைக்கப்படுகிறது. பாதுகாப்பு : இருட்டாக இருக்கிறது, விளக்கு எரியவில்லை என நினைத்து திருடர்கள் வந்தால், திடீரென ஆன் ஆகும் இந்த விளக்குகள் திருட்டைத் தடுக்க உதவுகின்றன. மேலும் படிக்க | சந்திரனில் லைட் ஹவுஸ் வைக்கப்போகும் நாசா! மாத்தி யோசிக்கும் விஞ்ஞானிகள்! வசதி : இருட்டில் சிக்கிக் கொள்வதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. மோஷன் சென்சார் விளக்குகளை எங்கு நிறுவுவது? கதவுகள் மற்றும் ஜன்னல்கள்: பொதுவாக திருடர்கள் உள்ளே நுழைய பயன்படுத்தும் இடங்களான கதவுகள் மற்றும் ஜன்னல்களில் மோஷன் சென்சார் விளக்குகளை நிறுவலாம். படிக்கட்டுகளின் பக்கவாட்டு: இரவில் படிக்கட்டுகளில் இறங்கும்போது மோஷன் சென்சார் விளக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கார் பார்க்கிங் - உங்கள் கார் பார்க்கிங்கில் மோஷன் சென்சார் விளக்குகள் இருந்தால், காரை இருட்டில் எளிதாகக் கண்டறியலாம். தோட்டம்: தோட்டத்தில் மோஷன் சென்சார் விளக்குகளை நிறுவுவது, இரவில் யாராவது வந்தாலும், பூச்சிகள், ஊர்வன, சிறிய விலங்குகள் இருந்தால் கண்டறிந்து பாதுகாப்பாக இருப்பது சுலபம். மேலும் படிக்க | கடலுக்குள் மர்ம அமில மண்டலம்! அமிலம் உருவாவதால் நாடுகள் பாதிக்கப்படுமா? காரணம் என்ன? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.