TAMIL

குவைத் தீ விபத்து: 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை உயரும் அச்சம்!

Kuwait Fire Accident Latest News Updates: தெற்கு குவைத்தில் உள்ள மாங்காப் நகரில் உள்ள தொழிலார்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில், தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிலும் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் குவைத்தில் உள்ள மங்காப்பில் உள்ள NBTC நிறுவனத்தின் தொழிலாளர்கள் தங்கும் மையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் தமிழ்ர்கள் மட்டுமின்றி மலையாளிகளும் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனினும், 49 பேர் உயிரிழந்ததாக சில அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜே.பி. ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அந்த கட்டடத்தில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டது எப்படி? காயமடைந்தவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 4 மணியளவில் மாங்காப் பிளாக்கில் உள்ள கட்டடத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் அதான் மருத்துவமனையில் 21 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 11 பேர் அல் கபீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The video shows the moment when the Mangaf fire broke out, which claimed the lives of more than 40 people and left dozens injured. The fire started from the storage room of the building's guard, where gas cylinders were kept, and engulfed the entire building. #Kuwait #Fire pic.twitter.com/N8akVUug4R — Khizar Ali Khan (@Khizar_Alig) June 12, 2024 தீ பரவுவதைக் கண்டு பலர் மேலே இருந்து குதித்ததால் சிலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தீயை அணைத்துள்ளனர். மேலும் கட்டடத்தின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புகையில் சிக்கியும், மூச்சுத் திணறியும், தீ விபத்தில் சிக்கியதால்தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க | செக்ஸிற்கு மறுத்த மனைவி! திருமணமான 12 நாட்களில் வெளிவந்த உண்மை..ஷாக்கான கணவன் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் இரங்கல் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவரது X பதிவில்,"குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நமது இந்திய தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என குறிப்பிட்டுள்ளார். Deeply shocked by the news of the fire incident in Kuwait city. There are reportedly over 40 deaths and over 50 have been hospitalized. Our Ambassador has gone to the camp. We are awaiting further information. Deepest condolences to the families of those who tragically lost… — Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 12, 2024 ராமதாஸ் இரங்கல் மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி, உயிரிழந்த தமிழர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல்: உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை வேண்டும்! குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர்… — Dr S RAMADOSS (@drramadoss) June 12, 2024 மேலும் அவர் தனது அறிக்கையில், "குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் இந்தியர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குவைத் தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். விவரங்களை கோரும் அயலக தமிழர் நலத்துறை அயலக தமிழர் நலத்துறை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை குறித்து குவைத் தூதகரத்திடம் தகவல் கேட்டது. குவைத்தில் உள்ள தமிழ் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கோரியுள்ளோம் என அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது. ஹெல்ப்லைன் நம்பர் இந்த விபத்து குறித்து இந்தியர்கள் தங்களின் உறவினர்கள் குறித்த தகவல்களுக்கு, தூதரகம் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த +965-65505246 அவசர உதவி எண்ணில் அழைத்து உங்களுக்கு தேவையான தகவல்களை கேட்கலாம். உறவினர்கள் குறித்த தகவல்களுக்கு இந்த ஹெல்ப்லைனுடன் தொடர்புவைத்திருக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குவைத்தின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியுடன் உள்ளது எனவும் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க | பெண்ணை உயிருடன் விழுங்கிய அனகோண்டா! 3 நாட்களுக்குப் பின் காத்திருந்த அதிர்ச்சி திகில் சம்பவம்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.