TAMIL

தேங்காய் எண்ணெய்... குக்கிங் ஆயிலா அல்லது ஹேர் ஆயிலா... 15 வருட வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படும் குக்கிங் ஆயிலா அல்லது தலையில் பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் ஹேர் ஆயிலா என்ற 15 வருடங்கள் பழமையான வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் கொண்டு வரப்பட்ட கலால் வரி விதிப்பு தொடர்பான இந்த விவகாரத்தில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெஞ்ச், தற்போது தீர்வு கண்டுள்ளது. தேங்காய் எண்ணெயை எந்த பிரிவில் வைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முன் கேள்வியாக இருந்தது. சமையல் எண்ணெய் பிரிவில் வைத்து அதன் மீது வரி விதிக்கப்பட வேண்டுமா அல்லது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரி வசூலிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்டது. எண்ணெய் உணவில் பயன்படுத்தப்பட்டாலும் அல்லது சருமம் அல்லது கூந்தலுக்கு பயன்படுத்தப்பட்டாலும், அதன் பேக்கேஜிங்கில் எழுதப்பட்ட குறிப்பின் அடிப்படையில் கலால் வரி விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக இந்த வழக்கில், 2019 நவம்பரில் அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.பானுமதி அமர்வு, இரு பிரிவாக தீர்ப்பு வழங்கியது. அந்த பெஞ்சில், தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி கோகோய், சிறிய பேக்கேஜிங்கில் உள்ள தேங்காய் எண்ணெயை சரியான முறையில் சமையல் எண்ணெய் என வகைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி பானுமதி சிறிய பேக்கேஜிங்கில் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கான கருத வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் இரு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிறுவனங்கள் தங்கள் எண்ணெயை பிராண்ட் செய்து விற்கும் முறையைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டு உணவு பாதுகாப்பு விதிகள் அல்லது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரி வசூலிக்கப்படும் என்று கூறியது. மேலும் படிக்க | வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் ரூ. 3.50 லட்சம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்? சுத்தமான தேங்காய் எண்ணெயை எப்போதும் ஹேர் ஆயில் என வகைப்படுத்த வேண்டும் என்பது வருவாய்த் துறையின் வாதமாக இருந்தது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி குமார், சிறிய அளவில் விற்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாக என வகைப்படுத்தலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். சமையலுக்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் சிறிய கொள்கலன்களில் விற்கப்பட்டது என்பதாலேயே அது ஹேர் ஆயிலாக பயன்படுத்துவதற்கு ஏற்ற பேக்கேஜிங் என கருத முடியாது. ஒரு நபர் சமைக்க பயன்படுத்தப்படும் எண்ணெயை சிறிய அளவில் கூட வாங்கலாம் எனக் கூறினார். நீதிமன்றத்தின் இந்த முடிவு FMCG நிறுவனங்களுக்கும், Marico மற்றும் Bajaj Consumer போன்ற வாடிக்கையாளர்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது. தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இப்போது சமையல் எண்ணெய்க்கான குறைந்த ஜிஎஸ்டி விகிதமான 5% ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் ஹேர் ஆயில் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி 18% என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! திமுக vs காங்கிரஸ்.. அதிமுக புறக்கணிப்பு? பாஜக யோசனை சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.