TAMIL

iPhone 16, Samsung, Pixel 9: ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி தள்ளுபடிகள்.... அசத்தும் Flipkart

Flipkart Big Bachat Days sale: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் "பிக் பச்சத் டேஸ்" விற்பனை தொடங்கிவிட்டது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் 2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே அதிரடியான பல சலுககளுடன் சேலை தொடக்கியுள்ளது. பல்வேறு ஸ்மார்ட்போன்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் பிளிப்கார்ட் 2025 ஆம் ஆண்டைத் தொடங்கியுள்ளது. ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை நடைபெறும் இந்த விற்பனையில் ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் பல நிறுவனங்களின் பிரபலமான மாடல்களில் வங்கி தள்ளுபடிகள், கூப்பன் சேமிப்புகள் மற்றும் வட்டி இல்லாத சமமான மாதாந்திர தவணை (EMI) திட்டங்கள் ஆகியவை கிடைக்கின்றன. Apples iPhone 16 ஆப்பிளின் ஐபோன் 16, இந்த பிளிப்கார்ட்டின் சேலில் குறிப்பிடத்தக்க டீல்களை பெறுகின்றன. குறிப்பிட்ட மாடல்களில் ரூ.7,000 வரையிலான கேஷ்பேக் அல்லது வவுச்சர் சேமிப்புடன் கூடுதலாக UPI பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 தள்ளுபடியையும் பெறலாம். முதலில் ரூ.144,900 விலையில் இருந்த iPhone 16 Pro Max (256GB) இப்போது ரூ.137,900 -க்கு கிடைக்கிறது. இதேபோல், ஐபோன் 16 ப்ரோ (128 ஜிபி) -இன் விலை முன்னர் ரூ.119,900 ஆக இருந்தது. இப்போது இந்த பிளிப்கார்ட் விற்பனையில் இதன் விலை வெறும் ரூ.112,900. கூடுதலாக, ஐபோன் 16 பிளஸ் (128 ஜிபி) அல்லது ஐபோன் 16 (128 ஜிபி) வாங்கத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 மற்றும் ரூ.2,000 யூபிஐ கட்டணத் தள்ளுபடிகளை பெறலாம். மேலும் Flipkart, குறிப்பிட்ட மாடல்களில் ஆறு மாதங்கள் வரை ICICI வங்கி கார்டுகளில் வட்டியில்லா EMI வசதியை வழங்குகிறது. இந்த டீலின் மற்றொரு சிறப்பம்சம் கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகும். இதில் HDFC வங்கி கார்டுகளின் மூலம் பல்வேறு மாடல்களில் ரூ.10,000 வரை தள்ளுபடி கிடைக்கின்றது. Pixel 9 Pro Fold (256GB), Pixel 9 Pro XL (256GB), மற்றும் Pixel 9 Pro (256GB) ஆகியவற்றுக்கு முழுமையாக ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கின்றது. இவை அனைத்தின் ஆரம்ப விலையும் ரூ.172,999 ஆகும். அடிப்படை Pixel 9 (256GB) இல் ரூ.4,000 தள்ளுபடி உள்ளது. நத்திங் கேபிள்கள் மற்றும் கூகுள் சார்ஜர்கள் போன்ற பாகங்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். அதிக நெகிழ்வுத்தன்மையை விரும்பும் HDFC வங்கி அட்டைதாரர்களுக்கு, Flipkart குறிப்பிட்ட கேஜெட்களில் 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத EMI வசதியை வழங்குகிறது. Samsung Galaxy Z Fold 6 மற்றும் Z Flip 6 Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 ஆகியவற்றின் சலுகைகள் சாம்சங் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை பெற்றுள்ளன. அசல் விலை ரூ.164,999 அக இருந்த Galaxy Z Fold 6 (256GB) இப்போது ரூ.12,500 வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதேபோல், Galaxy Z Flip 6 (256GB) இன் விலை ரூ.109,999ல் இருந்து ரூ.11,000 குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுதாரர்கள் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டி இல்லாத EMI வசதியை பெறலாம். இந்த ஃபிளாக்ஷிப் மாடல்கள் தவிர, மோட்டோரோலா, சியோமி, விவோ, ஒப்போ மற்றும் நத்திங் உள்ளிட்ட பிற நன்கு அறியப்பட்ட பிராண்டுகளும் பிளிப்கார்ட்டின் "பிக் பச்சத் டேஸ்" விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ரெட்மி நோட் 14 தொடர் போன்ற, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களும் அடங்கும். மேலும் படிக்க| புது போன் வாங்க பிளானா....2025 ஜனவரியில் அறிமுகமாகும் சில சூப்பர் போன்கள் விபரம் இதோ மேலும் படிக்க | Flipkart Big Bachat Days Sale: பிராண்டட் ஸ்மார்ட்போன்களில் சர்ப்ரைஸ் ஆஃபர்... மிஸ் பண்ணிடாதீங்க சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.