TAMIL

எவரெஸ்டை விட 3 மடங்கு பெரிய மலை! விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!!

உலகிலேயே மிகவும் உயரமானது எவரெஸ்ட் என்று தெரியும். ஆனால் அது சூரிய குடும்பத்தில் மிக உயரமான மலை இல்லை என்பது தெரியுமா? சூரிய மண்டலத்தின் மிக உயரமான சிகரம் பூமியில் இல்லை, வெஸ்டா என்ற சிறுகோள் மீது உள்ளது, இது ரியாசில்வியா மலை என்று அழைக்கப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தைவிட மூன்று மடங்கு பெரியது பூமியின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் மலையேறுபவர்களுக்கு சவாலான பயணம் தான். இர்நுதாலும், எவரெஸ்டை விட மூன்று மடங்கு பெரிய ஒரு மலை இருப்பது ஆச்சரியம் அளிக்கலாம். சூரிய மண்டலத்தின் மிக உயரமான மலை என்று பிரபஞ்சத்தின் மிக உயரமான சிகரத்தைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள பலரும் விரும்புகின்றனர். 22,500 மீ (74,000 அடி) உயரத்தில் உள்ள வெஸ்டாவின் ரீசில்வியா மலை, எவரெஸ்ட் சிகரத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு பெரியது மற்றும் சிறுகோளின் முழுப் பகுதியில் 90 சதவீதத்தை உள்ளடக்கிய பள்ளத்தால் உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த பெரிய மலையாக இருப்பது செவ்வாய் கிரகத்தின் ‘ஒலிம்பஸ் மோன்ஸ் ஆகும். 21,945 மீ (72,000 அடி) உயரத்தில் சூரிய மண்டலத்தின் மிக உயரமான எரிமலையான செவ்வாய் கிரகத்தில் ஒலிம்பஸ் மோன்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் படிக்க | Amazon சேல் முடிஞ்சா என்ன? குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கும் அமேசான் சலுகைகள்! ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது பிரான்ஸைப் போன்ற ஒரு பகுதியில் பரந்து விரிந்து பரந்து காணப்படும் ஒரு 'கவச எரிமலை' ஆகும். கடந்த 25 மில்லியன் ஆண்டுகளாக, எரிமலை செயலற்ற நிலையில் உள்ளது. ஒலிம்பஸ் மோன்ஸ் முதன்முதலில் நாசா மரைனர் 9 விண்கலத்தால் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கிரேக்க கடவுள்களின் புராண இல்லத்தின் பெயரிடப்பட்டது. இந்த மலையானது தர்சிஸ் ரைஸ் எனப்படும் சிகரத் தொடர்களால் உருவானது. இது, செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது. ஒலிம்பஸ் மோன்ஸ் பூமியில் உள்ள எரிமலைகள் போன்ற டெக்டோனிக் தகடுகளின் இயக்கத்தால் உருவாகவில்லை என்பதும், ஒரு மாக்மா ஹாட்ஸ்பாட் மேலே அமர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மில்லியன் கணக்கான ஆண்டுகளின் செயல்பாடுகளினால் இந்த இடத்தில் எரிமலையின் உருவாகியது. சமீபத்தில், விஞ்ஞானிகள் மலையின் உச்சியில் பனிக்கட்டி வடிவங்களைக் கண்டறிந்தபோது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம் தெரியவந்தது. மனித முடியைப் போல் அடர்த்தியான உறைபனியின் ஒரு அடுக்கு, ஒவ்வொரு நாளும் சிகரத்தில் உருவாகிறது. மேலும் படிக்க | சொகுசு விமானத்தில் மலிவான கட்டணத்தில் தனியா பறக்கனுமா? சுலபமான டிப்ஸ்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.