TAMIL

தில்லியில் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை... இன்று தொடக்கி வைத்தார் பிரதமர்

இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் இந்திய இரயில்வே நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை இணைக்கும் இந்திய ரயில்வே, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பாக உள்ளது. தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்க அமைக்கப்பட்ட அதிவேக டெல்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) ஒரு பகுதி இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது. சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே 13 கி.மீ நீளமுள்ள டெல்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பள்ளிக் குழந்தைகளுடன் நமோ பாரத் ரயிலில் பயணம் செய்தார் பிரதமர் மோடி சாஹிபாபாத் ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, நமோபாரத் ரயிலின் டிக்கெட்டை வாங்கினார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள நியூ அசோக் நகருக்கு மெட்ரோ ரெயிலில் பள்ளி மாணவர்களுடன் பயணம் செய்தார். பிரதமர் மோடி காலை 11 மணிக்கு ஹிண்டன் சென்றடைய வேண்டும். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியாக சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நமோ பாரத் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் மூன்றாம் கட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு சாஹிபாபாத்தில் இருந்து நமோ பாரத் ரயிலில் பிரதமர் பயணம் செய்தார். இதன் போது பள்ளி மாணவர்களை சந்தித்தார். குழந்தைகள் பிரதமருக்கு சில ஓவியங்களை பரிசாக அளித்தனர். இன்று முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் தற்போது சாஹிபாபாத் மற்றும் மீரட் தெற்கு இடையே 9 நிலையங்களைக் கொண்ட 42 கிமீ நீளமான நடைபாதை பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவுடன், நமோ பாரத் காரிடாரின் செயல்பாட்டுப் பகுதி மொத்தம் 11 நிலையங்களுடன் 55 கி.மீ. திறப்பு விழா முடிந்ததும், நமோ பாரத் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு இடைவெளியில் பயணிகளுக்கு ரயில் சேவை கிடைக்கும். டெல்லியில் இருந்து மீரட் திசையில் முதல் செயல்பாட்டு நிலையமான நியூ அசோக் நகர் நிலையத்திலிருந்து மீரட் தெற்கு வரையிலான கட்டணம் நிலையான கோச்சுக்கு ரூ. 150 மற்றும் பிரீமியம் கோச்சுக்கு ரூ.225. இந்த பிரிவில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், மீரட் நகரம் இப்போது நமோ பாரத் ரயில் மூலம் தேசிய தலைநகர் டெல்லியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.