TAMIL

Amazon சேல் முடிஞ்சா என்ன? குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கும் அமேசான் சலுகைகள்!

Amazon Great Freedom : அமேசான் அள்ளித் தந்த தள்ளுபடி சலுகை விற்பனையைத் தவறவிட்டீர்களா? அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், தள்ளுபடி விற்பனை முடிந்துவிட்டாலும், அதனைத் தவறவிடவிட்டாலும், அமேசானில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது பெரிய அளவில் சேமிக்கலாம் எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். கிரேட் ஃப்ரீடம் விற்பனை தற்போது கிரேட் ஃப்ரீடம் விற்பனை முடிந்தால், இன்னும் சில நாட்களில் நவராத்திரி விற்பனை, தீபாவளி விற்பனை, புத்தாண்டு விற்பனை, பொங்கல் விற்பனை என அடுத்தடுத்து விற்பனைக் காலம் வரவிருக்கின்றன. இன்னும் பல புதிய வரவுகள் எதிர்வரும் விற்பனைகளில் களமிறங்கும் என்பதால், இருக்கும் பழைய கையிருப்பை தீர்க்கும் விதமாக அதிரடி தள்ளுபடிகள் இன்னமும் தொடர்கின்றன. அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனை முடிந்திருக்கலாம், ஆனால் இன்னமும் சிறந்த டீல்கள் கிடைக்கின்றன, பல பிரிவுகளில் அதிரசி தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் எவை என்பதையும், எப்படி வாங்கினால், தள்ளுபடியில் கிடைத்ததைப் போலவே குறைவான விலையில் பொருட்களை வாங்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனைக்குப் பிறகும், Samsung, OnePlus மற்றும் Xiaomi போன்ற முன்னணி பிராண்டுகளின் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உயர்தரமான விலை உயர்ந்த கேஜட்டாக இருந்தாலும் சரி, அல்லது பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனத்தைத் தேடுபவர்களாக இருந்தாலும் சரி. இதுவும் வாங்குவதற்கு சரியான நேரம் தான். ஏனென்றால், புதிய பதிப்புகளை அறிமுகப்படுத்திய பிறகு, பழைய மாடல்களின் விலை கணிசமாக குறைந்து போகும். எனவே, கடந்த ஆண்டு மாடல்களுக்கு விலை மிகவும் குறைவாக இருக்கும். அவற்றை பார்த்து வாங்கினால் விலை குறைவாக வாங்கலாம். மேலும் படிக்க | குடிநீருக்கு காலாவதி தேதி..! அவசியம் தெரித்து கொள்ளுங்கள் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் ஹெச்பி, லெனோவா மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் மலிவான விலையில் கிடைக்கின்றன. வீட்டில் இருந்து வேலை செய்யும் புதிய அமைப்பையோ அல்லது கையடக்க பொழுதுபோக்கு சாதனத்தையோ விரும்பினால் அமேசானில், கிரேட் ஃப்ரீடம் தள்ளுபடி விற்பனைக்கு பிந்தைய தற்போதைய விலையை ஒப்பிட்டுப் பார்க்கவும். கூடுதல் கட்டணமின்றி கேஸ்கள் அல்லது ஸ்டைலஸ் பேனாக்கள் போன்ற துணைப் பொருட்களுடன் கூடிய சிறப்புத் சலுகைகளையும் பார்க்கலாம். ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ் ஹெட்ஃபோன்கள், இயர்பட்ஸ் மற்றும் புளூடூத் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ கியர் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. சோனி, போஸ் மற்றும் ஜேபிஎல் போன்ற பிராண்டுகள் தள்ளுபடி விற்பனைக்குப் பிறகும் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. வயர்லெஸ் இயர்பட்களுக்கான டீல்களை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருங்கள். இந்தியாவில் நவராத்திரி விற்பனை தொடங்குவதற்கு முன்னர் அதிரடியாக திடீரென தள்ளுபடி அறிவிக்கப்படலாம். ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் Amazon Echo, Google Nest என, பல்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் மற்றும் புதுமையான பாதுகாப்பு கேமராக்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கவுள்ளன. இந்தச் சாதனங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியாக்கி, வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்துகின்றன. அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனைக் காலங்களுக்குப் பிறகு, சில்லறை விற்பனையாளர்கள் பழைய சரக்குகளை குறைக்க விரும்புவதால் இந்த பொருட்களின் மீதான தள்ளுபடியை கண்டறிய சிறந்த நேரம் இதுதான். அமேசான் கிடங்கு (Amazon Warehouse) தள்ளுபடி மெதுவாகப் பயன்படுத்தப்படும் மற்றும் எப்போதும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான Amazon Warehouse டீல்களை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த தயாரிப்புகள் வழக்கமாக அசல் விலையில் இருந்து மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. அமேசானின் நம்பகமான வாடிக்கையாளர் சேவையுடன் வரும் இவற்றை நீங்கள் நம்பிக்கையுடன் ஷாப்பிங் செய்யலாம். மேலும் படிக்க | வந்தாச்சு வாட்ஸ்அப்பின் லேட்டஸ் அப்டேட்! இனிமேல் இன்னும் ஸ்மார்ட்டாய் புகைப்படத்தை பார்க்கலாமே! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.