TAMIL

தினசரி பட்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

காதுகளை சுத்தம் செய்ய துணிகள், சீப்புகள், ஹேர்பின்கள், பென்சில்கள், பட்ஸ், சாவிகள் போன்றவற்றை பலர் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலருக்கு குளித்தவுடன் பட்ஸ் பயன்படுத்துவது திருப்திகரமான உணர்வை தருகிறது. ஆனால் அது பாதுகாப்பானது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது அதிக தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பட்ஸ் காதுகளில் உள்ள அழுக்குகளை முறையாக சுத்தம் செய்யாது என்றும், வெளியே இருக்கும் அழுக்கை இன்னும் உள்ளே தான் தள்ளும் என்றும் கூறப்படுகிறது. இது காலப்போக்கில் உங்கள் செவிப்பறையை காயப்படுத்தலாம். பட்ஸ்க்கு பதில் வேறு ஏதேனும் பொருளை வைத்து காது குடைவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் படிக்க | ராஷ்மிகா மந்தனா பரிந்துரைக்கும் 6 சிந்தனையை தூண்டும் புத்தகங்கள்!! இதனால் காதில் வலி, நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிலருக்கு காது கேட்காமல் போகவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் காதுகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காதில் உள்ள மெழுகு அதிக பயனுள்ளதாக இருக்கும், இது நமது காதுகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இல்லாத வரையில் அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது என்று கூறப்படுகிறது. காதில் உள்ள மெழுகு போன்ற ஒரு பிசின் உடலுக்கு நல்லது இல்லை என்று மக்கள் நினைக்கின்றனர், ஆனால் அது உண்மையல்ல. நமது காதுகளில் தூசி நுழையாமல் இருக்கவும், கெட்ட விஷயங்களைத் தடுக்கவும் இது ஒரு இயற்கையான தடுப்பு ஆகும். பலர் தங்கள் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது என்று நினைக்கிறார்கள், ஆனால் அடிக்கடி சுத்தம் செய்வது சிக்கல்களை ஏற்படுத்தும். உதாரணமாக, காது மெழுகு உள்ளே வெகுதூரம் தள்ளப்பட்டால், அது சிக்கிக்கொள்ளலாம் மற்றும் அதை சரிசெய்ய மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கும். காதுகள், மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனையை சரி செய்யும் மருத்துவர்கள், மக்கள் தவறான முறையில் காதுகளை சுத்தம் செய்வதால் செவிப்பறையில் துளைகள் ஏற்பட்டு பெரிய பிரச்சனைகளால் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர். தற்போது காதுகளில் உள்ள அழுக்குகளை அகற்ற பல கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது. சிலர் வேக்ஸ் செய்கின்றனர். ஆனால் இது சிக்கலை அதிகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே இது போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் கேட்பது நல்லது. தெரியாமல் செய்யும் சில தவறுகள் காதுகளை காயப்படுத்தலாம். நீச்சல் அல்லது குளித்த பிறகு உங்கள் காதில் தண்ணீர் இருந்தால், துண்டு அல்லது டிஷ்யூவை பயன்படுத்துவது நல்லது. தேவையில்லாமல் அடிக்கடி பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் காதில் வலியை உணர்ந்தாலோ, சரியாக காது கேட்காவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. (பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) மேலும் படிக்க | 20 வயதில் ‘இதை’ செய்தால் 60 கஷ்டமே தெரியாது! என்ன செய்யனும் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.