TAMIL

காலக்கெடு ஜனவரி 15.. ஊழியர்களுக்கு ரூ.15000 ஊக்கத்தொகை குறித்து EPFO புதிய அறிவிப்பு

Employment Linked Incentive Latest Updates: மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ₹15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்ன வகையான அறிவிப்பு? இந்த அறிவிப்பு மூலமாக எந்தெந்த ஊழியர்கள் பயன்பெற முடியும்? என்ன வகையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது? இதற்கான கால அவகாசங்கள் எதுவும் வழங்கப்பட்டு உள்ளதா? போன்ற விவரங்களை பார்ப்போம். ஊழியர்கள் சலுகை சார்ந்த தகவல் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகளும், சலுகை சார்ந்த தகவல்களும், அந்த சலுகைகளை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் அதற்கான நிபந்தனைகளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் அந்த வரிசையில், இபிஎஃப்ஓ அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று தவணைகளில் நிதியுதவி வழங்கப்படும் இந்த திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு அறிமுகப்படுத்திய முக்கிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கான (ELI) காலக்கெடுவை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மீண்டும் ஒருமுறை நீட்டித்துள்ளது. யூனியன் பட்ஜெட் 2024 முக்கிய அறிவிப்பு இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் யூனியன் பட்ஜெட் 2024-ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய திட்டத்தை அறிவித்தார். அதாவது தொழிலாளர்களை ஒழுங்கமைக்கப்பட்ட துறையுடன் இணைக்க "வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை" திட்டத்தின் (Employment Linked Incentive) கீழ் முதல் முறை ஊழியர்களை குறிவைத்து ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஊக்கத்தொகை திட்டத்திற்கான காலக்கெடு முதலில் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கான காலக்கெடு நவம்பர் 30, 2024 வரை வழங்கப்பட்டது. அதன்பிறகு காலக்கெடுவை டிசம்பர் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்படுவதாக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணயம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், தகுதி வாய்ந்த அனைத்து ஊழியர்கள் வங்கிக் கணக்கிலும் யுஏஎன் (Universal Account Number) செயல்படுத்துதல் மற்றும் ஆதார் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை ஜனவரி 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வருங்கால வைப்பு நிதி ஆணையம் சுற்றறிக்கை எனவே இந்த திட்டத்தின் பலன்களைப் பெற தகுதி உள்ள ஊழியர்களுக்கு யுஏஎன் (Universal Account Number) ஆக்டிவேஷனை உடனடியாக முடிக்குமாறு வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தகுதியான ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு UAN எண் செயல்படுத்தல் மற்றும் ஆதாருடன் வங்கிக் கணக்குகளை இணைப்பது கட்டாயமாகும். ஊக்கத்தொகை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த யூனியன் பட்ஜெட் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஊக்கத்தொகை திட்டம், "திட்டம் ஏ" "திட்டம் பி" மற்றும் "திட்டம் சி" என மூன்று முக்கிய திட்டங்களைக் கொண்டு உள்ளது. ஒவ்வொரு திட்டத்தின் கீழும் ஊழியர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் உரிமையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகை ஏ திட்டத்தின் நோக்கம் "திட்டம் ஏ" இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதல் முறையாக வேலை தேடுபவர்களை அங்கீகரித்து ஒரு மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாக வழங்குவது ஆகும். அதிகபட்சமாக ரூ.15,000 வரை மூன்று தவனைகளாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஊக்கத்தொகை பி திட்டத்தின் நோக்கம் "திட்டம் பி" இது உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி சந்தாக்களை நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக பெறலாம். ஊக்கத்தொகை சி திட்டத்தின் நோக்கம் "திட்டம் சி" இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ₹3000 என இரண்டு ஆண்டுகளுக்கு சந்தா செலுத்த வேண்டும். இந்த திட்டம் ஜனவரி 2025 முதல் செயல்படுத்தப்படும். ஊழியர்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கி, இளைஞர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும். எனவே ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி, யுஏஎன் (UAN) ஆக்டிவேஷன் மற்றும் ஆதாருடன் வங்கிக் கணக்குகளை உடனடியாக இணையுங்கள். இதமூலம் கூடுதல் நிதி உதவி மற்றும் வருங்கால வைப்பு நிதி பாதுகாப்பு கிடைக்கும். மேலும் படிக்க - கடைசி காலத்தில் கூடுதல் பென்ஷன் வேண்டுமா? ஓய்வூதியதாரர்கள் இதை செய்தால் போதும்! மேலும் படிக்க - ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த நிவாரணம்: புதிய ஓய்வூதிய முறை... இனி 'அந்த' கவலை இல்லை மேலும் படிக்க - EFPO Withdrawal Rules: வீடு வாங்க, பழுது பார்க்க PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வழிமுறையும் விதிகளும் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.